புதன், 10 ஆகஸ்ட், 2011

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்.. ஒரு பார்வை

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்.. ஒரு பார்வை..

23 01 2010
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் ஒரு பார்வை :
நாஜிக்களின் அழித்தொழிப்பை அடுத்து தங்களுக்கென சொந்தமாக ஒரு தேசம் என்ற கனவை நனவாக்குவதற்கான உடனடித் தேவையை யூதர்கள் உணர்ந்தார்கள். முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஜெருசலேமின் சுற்று வட்டாரப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தது உணர்வுப்பூர்வமான முடிவு. ஆனால் “ஆளற்ற ஒரு பிரதேசத்திற்கு, நிலமற்ற யூதர்கள்” என்று அப்போது வெளியிடப்பட்ட கவர்ச்சிகரமான கோஷம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஏமாற்று வாசகம் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிகிறது.
1948ல் ஐ.நா சபையின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநீதி விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு அந்தப் பகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. 1919ன் கணக்குப்படி அங்கு 7 லட்சம் அராபியர்கள் இருந்தார்கள். யூதர்களின் “ஊடுருவல்” 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். இன்று இஸ்ரேலின் உளவுப் படை மொஸாத் செய்வது போன்ற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்தது. பணமும் பலவந்தமும் கொண்டு மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரேயடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அடால்ப் ஹிட்லரின் யூத அழித்தொழிப்பு வெறித்தனம்.
நாஜிக்களின் அழித்தொழிப்பால் உலகமே யூதர்களின் மீது பரிதாபம் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்த ஆரம்ப கால அநீதிகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. அராபியர்களிடமிருந்து நிலங்கள் காசு கொடுத்து வாங்க முயற்சி நடந்தது. அந்த நிலங்களை மீண்டும் ஒரு அராபியருக்கு விற்க முடியாது என்ற விதியின்கீழ் நில வர்த்தகங்கள் நடந்தன. அராபியர்களின் தேசத்தை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்று விரைவில் உணர்ந்துகொண்ட அராபியர்களை நேர் வழியில் விரட்ட முடியாமல் போனதால், பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக அராபியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தார்கள்.
கடந்த நூற்றாண்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் அழித்தொழிப்பின் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த யூதர்கள், மறு நொடியில் அராபிய இனக்குழுக்களை ரகசியமான வழிகளில் அழித்தொழிக்கும், விரட்டியடிக்கும் புதிய நாஜிக்களாக மாறினார்கள். அகதிகளாக, நாடற்றவர்களாக விரட்டப்பட்ட அராபியர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட சிறிய பகுதியில்கூட முழு சுதந்திரத்துடன், தன்மானத்துடன் வாழ அனுமதிக்கக்கூடாது என்ற இஸ்ரேலின் வன்முறை மனோபாவம்தான் ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவைப் பெருக்குகிறது.
இரண்டு சமூகங்களும் ஒரு தேசமாக இணைந்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது நாட்டில் சிறுபான்மையினராகக்கூட அராபியர்கள் இருப்பதை அனுமதிப்பதில்லை. “தென்னாப்ரிக்காவின் நிறவெறி (அபார்தீட்) கொள்கையைப் போன்றதுதான் இஸ்ரேலின் பாலஸ்தீனிய கொள்கை. அதனால் நிறவெறிக்கெதிராக உலக நாடுகள் எவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதோ அதே போல இஸ்ரேலிடமும் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஐ.நா பொது சபையின் தலைவர் மிகேல் டி-எஸ்காட்டோ புராக்மேன். புராக்மேன் இஸ்ரேலை வெறுப்பவர், அதனால்தான் இவ்வாறு சொல்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறது இஸ்ரேல். எனினும் ஜூவ்ஸ் பார் ஜஸ்டிஸ் இன் த மிடில் ஈஸ்ட் என்ற யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரால் நடத்தப்படும் இயக்கம் இஸ்ரேலின் பல பொய்களை அம்பலமாக்கி வருகிறது.
மண்ணின் மைந்தர்களுக்கு தங்கள் வாழ்விடம் குறித்த எந்த உரிமையும் இல்லை என்ற காலனியாதிக்க மனோபாவத்துடன் அராபியர்களை விரட்டியடித்ததுதான் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. எவ்வாறு யூதர்கள் மிகவும் திட்டமிட்டு அங்கிருந்து அராபியர்களை விரட்டிவிட்டு, அதை ஒரு யூத தேசமாக்கினார்கள் என்பதை அந்த அமைப்பு முழுமையான பதிவு செய்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன அராபியர்கள் வாழ வழியே இல்லை என்பதால்தான் நோம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்கள்கூட யூதர்களுக்கும் பாலஸ்தீன அராபியர்களுக்கும் தனித் தனி தேசங்களை கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடுவில் ஒண்டிக்கொண்டு வாழும்படி உருவாக்கப்பட்ட தேசம் பாலஸ்தீனர்கள் உண்மையில் விரும்பிய தேசம்தானா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு யாசர் அராபத்தின் கட்சி சரிவைச் சந்தித்திருக்காது. வரலாற்றுரீதியாக பாலஸ்தீனர்களுக்கு உள்ள வாழ்வுரிமையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய யாசிர் அராபத் பெரும் பங்காற்றினார்.
தான் தலைவராக வேண்டும் என்பதற்காக யூதர்களுக்குத் தனி தேசம், அராபியர்களுக்குத் தனி தேசம் என்ற சமரசத்தையே முன்வைத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுவது உண்டு. எனினும் யூத-அராபிய தரப்பில் நிலவிய மிகுந்த மனக் கசப்பால் அவர்கள் ஒரு தேசத்தின்கீழ் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பது ஏற்கக்கூடிய வாதம்தான். ஆனால் யாசர் அராபத்தின் சமாதான முயற்சிகளுக்கு நடுவே ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது.
யாசர் அராபத்தின் மரணத்திற்குப் பிறகு அவரது கட்சி இன்னும் பலவீனமானது. அவருடைய கட்சியுடனும் இஸ்ரேலும் அதன் காட் பாதரான அமெரிக்காவும் கைகுலுக்கத் தொடங்கியது பாலஸ்தீனியர்களிடையே எதிர்மறை எண்ணத்தை விதைத்திருக்க வேண்டும்.
அரபு நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவும் அமெரிக்கக் கனவு மீண்டும் பலித்துவிட்டது போல் தெரிந்த சமயத்தில் பாலஸ்தீனத்தில் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. அரை நூற்றாண்டு காலமாக பாலஸ்தீனியர்கள் மனதில் விதைக்கப்பட்ட வெறுப்பு ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் வடிவில் வளர்ந்து நின்றது. 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதுவரை தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திய அமைப்பு சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றதை இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
புதிய பாலஸ்தீன அரசுக்கு கொடுத்து வந்த அத்தனை நிதியுதவியையும் நிறுத்தினார்கள். ஒரு தேசத்திற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த பாலஸ்தீனத்திற்கு அது பேரிடி. வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் அரசு ஊழியர்கலின் சம்பளத்தைக்கூட போட முடியாத நிலை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கா தேர்தலில் தோற்ற பிரதமர் மஹ்மூத்தின் பதா கட்சியின் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அணிவகுத்தன. ஹமாஸ்-பதா இடையே குட்டி போர் வெடித்தது.
இஸ்ரேல் கட்டியுள்ள 750 கிலோமீட்டர் நீளமுள்ள இஸ்ரேல் -பாலஸ்தீன தடுப்பு சுவர்….இது ஜெர்மனியின் பெர்லின் சுவரை விட பலமடங்கு பெரியது..
அமெரிக்கா செய்த அரசியலால் இன்று பாலஸ்தீனம் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா, பதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்படுத்தும் வெஸ்ட் பேங்க் என தனித் தனி பிரதேசங்களாக பிளவுபட்டிருக்கிறது. இடையிடையே பயங்கரவாதி என்று வர்ணித்த ஹமாஸுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தங்களை செய்துகொள்ளத் தயங்காத இஸ்ரேல், அந்த ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசியில் கையெழுத்தான ஒப்பந்தத்திபடி பாலஸ்தீனுக்குள் வரும் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.
ஆனால் இஸ்ரேல் ஒன்று பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதே இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலான பொருட்களையே அனுமதித்து வருகிறது. இதனால் மருந்து, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை பாலஸ்தீனத்தை ஒரு குட்டி சோமாலியா போல மாற்ற அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த டிசம்பரில் முடிவுக்கு வரும் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்தது ஹமாஸ்.
அதையே ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்று இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. தேசங்களின் இறையாண்மையைவிட தங்களின் நோக்கங்களே பெரிது என்று கருதும் இஸ்ரேல் மற்ற பல நாடுகளின் எல்லையில் ரகசிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. இன்னும் முழுமையான தேசமாக உருவெடுக்காத பாலஸ்தீனத்தினத்திற்குள் அப்படி எக்கச்சக்கமான “ஆபரேஷன்கள்” நடத்தப்பட்டுள்ளன. தனக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதும் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்.
அவர்களில் சிலர் நிரந்தரமாக காணாமல் போவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதிகளை கடத்திச் சென்றதுதான் ஹமாஸ் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. இஸ்ரேல் சிவிலியன்களை பிடித்துச் செல்வதை பிரச்சனையாக்காத உலக நாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி மிகுந்த அக்கறை காட்டுவதில் உள்ள அரசியலை கண்டிக்கிறார் சாம்ஸ்கி. பாலஸ்தீனுக்கு உதவ வேண்டிய சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் ஆளுக்கொரு அரசியல் காரணங்களால் ஒதுங்கி நிற்பது அதைவிட பெரிய வேடிக்கை. எகிப்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீன எல்லைகூட அத்தியாவசியப் பொருட்களுக்காக திறந்துவிடப்படவில்லை. எவ்வாறு இலங்கையில் புலிகள் நலனையும் தமிழர்கள் நலன்களையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்களோ அதே போல பாலஸ்தீனத்தில் ஹமாஸின் நலனையும் அராபியர்களின் நலனையும் பிரித்துப் பார்க்க அராபிய தேசங்கள் மறுக்கின்றன.
தங்களின் ஜனநாயகமற்ற அரசுகளுக்கும் ஹமாஸின் எழுச்சி அச்சுறுத்தலாக மாறும் என்று அராபிய தேசங்கள் அஞ்சுகின்றன. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த விஷயத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருப்பது தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தால்தான். யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு தேசமாக வாழும் உரிமையையே மறுக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை கொண்ட ஹமாஸ் ஒரு சகிப்புத்தன்மைமிக்க சக்தி அல்ல என்பது உண்மைதான். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள்கூட ஜனநாயக சக்திகள் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்காமலிருப்பதற்காகத்தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பாலஸ்தீனுக்குள் தனது படைகளை ஏவியுள்ளார்.
முன்னாள் பிரதமர் பின்யாமின் நெதன்யாகூதான் ஜெயிப்பார் என்ற கணிப்புகளை சிதறடிக்க அவருக்கு இந்த வாய்ப்பு உதவியிருக்கிறது என்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் முழு ஆதரவாளராக இருக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இந்த மாத இறுதியில் பதவியிறங்கும் முன்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக வேண்டும் என்று அவசர அவசரமாக இதைச் செய்துள்ளார்கள். ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் அவர்களுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. சொந்தமாகத் தயாரித்த அரைகுறை ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவியது ஒரு வகை கவன ஈர்ப்புதான்.
தங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார, வாழ்வாதார முற்றுகையை உடைக்க உலக நாடுகளின் கவனத்தை மத்திய கிழக்கை மூலம் திருப்ப வேண்டியிருந்தது. ஹமாஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியிருந்தாலும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆனால் இஸ்ரேலின் ஒரு வார வான் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீன பெண்கள், குழந்தை, போலீஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள். யூதாயிசம், இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகின் மூன்று பழம்பெரும் மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம். மதங்களின் பிறப்பிடம் இன்று, மதங்களுக்கிடையிலான மோதலுக்கான ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறது.
தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, தங்களையே அகதிகளாக விரட்டிய இஸ்ரேலுக்கும் அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்காவுக்கும் எதிரான உலக முஸ்லிம்களின் கோபத்தை கிறிஸ்தவ, யூத மதங்களின் மீதான கோபமாக அடிப்படைவாதிகள் திருப்புகிறார்கள். யூதர்களோடும் அமெரிக்காவோடும் தொடர்புடைய இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் அதன் பின்விளைவுகளை சந்திக்கின்றன. வெறுப்பு விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடிப்படைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேட்டைக் களமாக மாறுகின்றன.
இதில் அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலிய யூதர்கள வெறுப்பை விதைக்காமலிருந்திருந்தால் ஒரு ஹமாஸ் உருவாகியிருந்திருக்காது. சிறுபான்மையினரின் கழுத்தை நெரிக்கும் விஷயத்தில் ராக்கெட்டுகளும் செஞ்சிலுவைகளும் தடையாக இருப்பதை அரச பயங்கரவாதத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.

இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை

இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை

இந்த தேசம் இந்நாட்களில் உலகத்துக்கு ஒரு தேவையில்லாத சுமை,பாரமான கல்.எல்லா நாட்களும் தொலைகாட்சி,வானொலி மற்றும் பத்திரிகைகளில் இதன் பெயர்.ஒரு சின்ன தேசம்,நியூஜெர்சி அளவே....சொல்லிகொள்ளும் படியான இயற்கை வளம் கிடையாது.பின் ஏன் எல்லோரும் இதை எதிரியாய் பார்க்கிறார்கள்.அது இன்னும் ஆச்சர்யம்.இங்கிலாந்திடமிருந்து விடுதலையாகி 1948 -ல் தனி நாடானார்கள்.அடுத்த நாள் முதலே போரும் சண்டையும்.அனைத்து அராபியர்களின் பயங்கர எதிரி.அமெரிக்காவுக்கு பாரமான தோழன்,இந்தியா ஹாய் சொல்வதோடு சரி,ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் சொல்லி கொள்ளும் படியான உறவு இல்லை.நீங்கள் இஸ்ரேல் போனதான ஸ்டாம்பிங் உங்கள் பாஸ்போட்டில் இருந்தால் எந்த அரபு நாடுக்குள்ளும் நீங்கள் நுழைய முடியாது.அரபு நாடுகள் இதை இன்னும் ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை.தினம் குண்டு வெடிப்புகள்.நியூயார்க் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு காரணமே அமேரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதுதான் என்கிறார்கள்.அதை தொடர்ந்து இனி மேலும் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்க கூடாது என அமெரிக்காவில் பேசப்பட்டது.இப்போது எல்லா நாடுகளும் இஸ்ரேல் விவகாரத்தில் அடக்கிவாசிக்கவே விரும்புகின்றன.இப்படியாய்எல்லோருக்கும் இஸ்ரேல் ஒரு பாரமானகல்.இதை பைபிள் 2000 ஆணடுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது. இனி உலகில் நடக்கப்போகும் அநேக நிகழ்வுகழுக்கு இந்த நாடு முக்கிய காரணமாக அமையும்.நம்பினால் நம்புங்கள்.

சகரியா:12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூ

இசுரேல்...........

இசுரேல்http://tawp.in/r/9bm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
מדינת ישראל
மெதிநாத்து யிச்ராஃஏல்
دولة إسرائيل
தவ்லத் இசுராஇல்
இசுரேல் நாடு
இசுரேல் கொடி இசுரேல் சின்னம்


குறிக்கோள்
இல்லை
நாட்டுப்பண்
ஃகதிக்வா
Location of இசுரேல்
தலைநகரம் யெரூசலம்[1]
31°47′N 35°13′E
பெரிய நகரம் யெரூசலம்
ஆட்சி மொழி(கள்) ஃஈபுரு மொழி, அரேபிய மொழி
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர் சிமோன் பெரெஸ்
 -  பிரதமர் யெகூத் ஒல்மெர்ட்
விடுதலை ஐ.இ. இடமிருந்து 
 -  கூற்றம் மே 14 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 22,145 கிமீ² (149வது)
8,019 சது. மை 
 -  நீர் (%) ~2%
மக்கள்தொகை
 -  மே 2006 மதிப்பீடு 7,026,0001 (99ஆவது)
 -  1995 குடிமதிப்பு 5,548,523 
மொ.தே.உ
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $163.45 பில்லியன் (53ஆவது)
 -  நபர்வரி $23,416 (28வது)
ம.வ.சு (2003) 0.915 (உயர்) (23வது)
நாணயம் புது இசுரேல் செக்கெல் (₪) (ILS)
நேர வலயம் இசுரேல் நேரம் (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+3)
இணைய குறி .il
தொலைபேசி +972
1மேற்கு கரையில் வசிக்கும் மக்கள் உள்ளிட
இசுரேல் நாடு (எபிரேய மொழி: מדינת ישראל மெதினாத் யிஸ்ராஃஎல், அரபு மொழி: دولة إسرائيل தவுலத் இஸ்ராஃஇல்) என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரயேல் எனவும்தமிழில் அழைக்கப்படுகிறது. நடுநிலக் கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்நாடு யூதர்கள் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] பெயர்

இசுரேல் என்னும் பெயர் எபிரேய மொழி (ஹீப்றூ அல்லது ஹீப்ரூ) விவிலியத்தில் உள்ள ஒரு நிகழ்வின் அடிப்படையில் உருவாகியது. எபிரேய விவிலியத்தில் யாக்கோபு (Jacob) என்பவர் ஒரு காலத்தில் தன் எதிரியிடம் இருந்து இன்று இசுரேல் என்று அழைக்கப்படும் இந்நிலத்தை போரிட்டு வென்றெடுத்தார். அப்படி இந்நிலத்தை மீட்டபின் அவரை எல்லோரும் இசுரேல் என அழைத்தனர். எனவே யாக்கோபு உருவாக்கிய நிலம் தான் இசுரேல். யாக்கோபின் மக்கள் இசுரேலியர்கள் எனப்படுவர்.

[தொகு] வரலாறு


முதன்மைக் கட்டுரை: இசுரேலின் வரலாறு

[தொகு] இசுரேலின் அடிவேர்கள்

வரலாற்றில் முதன்முதலில் இசுரேலியர் என்று இம்மக்களைக் குறிப்பிட்டது எகிப்திய நினைவுச் சின்னமாகிய மெர்னெடாஃவ் ஸ்டீல் (கிரேக்கச் சொல் ஸ்டீல் = கல்) என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்புதான். இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்[2] மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். மேலும் யூதர்கள் இந்நிலத்தைத் தங்கள் மூதாதையர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு (Abraham, Isaac, Jacob) ஆகியோருக்கு தருவதாக கடவுள் வாக்களித்ததாக நம்புகின்றனர். கி.மு 1200ல் தொடங்கி தோராயமாக ஓராயிரம் ஆண்டுகள் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு பல யூத அரசர்கள் ஆட்சி செய்தனர். முற்காலத்து சாலமோன் கோயிலின் இடிபாடுகளும், பின்னர் கி.மு 515 முதல் .கி.பி. 70 வரையிலும் இருந்த இரண்டாவது கோயிலின் இடிபாடுகளும் இங்கே இருப்பதால் இந்நிலம் யூதர்களுக்கு மிகவும் புனிதமான நிலம் ஆகும்.
பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. a

[தொகு] சியோனிசம் அலியா


முதன்மைக் கட்டுரை: [[சியோனிசம் மற்றும் அலியா]]
இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.
தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார்.
சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904-1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.
முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-123 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924-1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் ஹெப்ரானைச் (Hebron) சேர்ந்தவர்கள்.
1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் (Nazism) ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.
1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலை வாங்குவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது..
மேலும் பார்க்க: யூத அகதிகள் மற்றும் 1922 நாடுகளின் கூட்டமைப்பின் பாலஸ்தீன உரிமைக் கட்டளை

[தொகு] யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.
பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

[தொகு] நாடு நிறுவப்படுதல்

டேவிட் பென்-குரியோன் டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்
1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.
இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.
பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

[தொகு] விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்


முதன்மைக் கட்டுரை: 1948 இசுரேல்-அரபுப் போர்
மேலும் பார்க்க: யூத அகதிகள், பாலஸ்தீன அகதிகள், பாலஸ்தீன வெளியேற்றம், மற்றும் அரபு-இசுரேல் பிரச்சனை
இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.
போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.
பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாடினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)
யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

[தொகு] 1950களிலும் 1960களிலும்

1954-1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சூயஸ் கால்வாயை(Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.
1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார்.
1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர்.
மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக ஜீன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து,விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது.
1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது.
1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார்.
மேலும் பார்க்க: Positions on Jerusalem, Jerusalem Law, Golan Heights, மற்றும் Israeli-occupied territories

[தொகு] 1970களில்

1967ன் போருக்குப் பின் 1968-1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதலை தொடங்கியன. இவற்றில் முக்கியம், 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கர வாதிகள் இசுரேல்னா ஆடும் பக்கத்தை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றன. பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது..
அக்டோ பர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீலென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுக்கு இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது..
1974ல், மைரின் ராஜிநாமாபின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மாரச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது..
1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு சரித்திரமிக்க விஜயம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடன் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

[தொகு] 1980கள்

சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.
1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது.
1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.

[தொகு] 1990கள்

வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.
1990ல், அப்போது குலைந்த சோவியட் யூனியனிலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்களை ஓட்டுகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகளை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போடு பிரசாரம் செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி ஒட்டிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்..
தேர்தல் தீர்ப்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளனுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது.
முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், உக்கிர வாதத்தை புகழ்செய்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார்.
ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார்.

[தொகு] இசுரேலின் நில நாட்டு அமைப்பு

இசுரேல் நிலப்படம்
இசுரேல் இட அமைப்பு நிலப்படம்
ஞாயிறு மறைவில் டெல் அவீவ் நகரில் ஒரு கரை

முதன்மைக் கட்டுரை: இசுரேல் புவியியல்
இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்கு கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன.
1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை.
1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்).

[தொகு] மாநகரப் பரப்பளவுகள்

மேலும் பார்க்க: இசுரேல் மாவட்டங்கள் மற்றும் இசுரேலிலுள்ள நகரங்களின் பட்டியல்
2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன. [3] ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. [1].

[தொகு] நாடாளுமை


முதன்மைக் கட்டுரை: இசுரேல் அரசியல்

[தொகு] சட்ட மன்றம்

The Knesset building, Israel's parliament
இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கினெஸ்ஸெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கினெஸ்ஸெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.

[தொகு] ஆட்சி செலுத்துவோர்

இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.

[தொகு] நாடமைப்புச் சட்டமும் சட்ட விதிகளும் முறைகளும்

எழுத்து வடிவில் இசுரேல் இன்னமும் தன் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்கவில்லை.

[தொகு] அறமன்றங்கள் அமைப்பும் அறம் முறைகள் வழங்குதலும்

Frontal view of The Supreme Court building

[தொகு] பொருளாதாரம்

[தொகு] மக்கள்

[தொகு] மக்கள் வகைப்பாடு

Israeli Bedouin soldiers chat with Arab civilians in Galilee, 1978
இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேஇல் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[4] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர். [5]

[தொகு] இசுரேல் பண்பாடு


முதன்மைக் கட்டுரை: இசுரேல் பண்பாடு
படிமம்:Israel-1948-prestate-stamps-Hebrew-mail.jpg
The first stamps, designed before the new state adopted its name, featured ancient Jewish coins and the text "Hebrew mail" in Hebrew and Arabic languages

[தொகு] இசுரேலில் சமயங்கள்


முதன்மைக் கட்டுரை: இசுரேலில் சமயங்கள்
Young Haredi men on Purim in Jerusalem.

[தொகு] ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. யெரூசலம் is the official capital, and the location of the presidential residence, government offices and the Knesset, Israel's Parliament. In 1980, the Knesset asserted Jerusalem's status as the nation's "eternal and indivisible capital", by passing the Basic Law: Jerusalem — Capital of Israel. However, the United Nations does not recognize this designation. The bulk international community argues that the city is still legally an international Corpus separatum and the final issue of the status of Jerusalem will be determined in future Israeli-Palestinian negotiations. Most countries maintain their embassies in Tel Aviv (CIA Factbook). See the article on Jerusalem for more information.
  2. "The Stones Speak: The Merneptah Stele". பார்க்கப்பட்ட நாள் 2006-04-08.
  3. Central Bureau of Statistics, Government of Israel. "Localities, population and density per sq. km. in the metropolitan area_km2s of Tel Aviv, Haifa and Beer Sheva". பார்க்கப்பட்ட நாள் 2006-04-08.PDF
  4. Central Bureau of Statistics, Government of Israel. "Population, by religion and population group". பார்க்கப்பட்ட நாள் 2006-04-08.PDF
  5. Central Bureau of Statistics, Government of Israel. "Jews and others, by origin, continent of birth and period of immigration". பார்க்கப்பட்ட நாள் 2006-04-08.PDF

[தொகு] மேலும் பாருங்கள்

  • இசுரெலிகளின் பட்டியல்
  • இசுரேலின் நகரங்களின் பட்டியல்
  • இசுரேலில் தொடர்பு
  • இசுரேலின் போக்குவரத்து
  • இசுரேல் பாதுகாப்பு படையினர்
  • இசுரேல் வெளியுறவு
  • இசுரேல் கட்டுப்பாட்டில் பகுதிகள்
  • இசுரேலும் ஐக்கிய நாடுகள் சபையும்
  • இசுரேலுக்கு எதிராக தீவிரவாதம்
  • இசுரேலில் பல்கலைக்கழகங்களின் பட்டியல்
  • டெல் அவீவ் பங்குச் சந்தை
  • இசுரேல் அறிவியல் மற்றும் மானிடவியல் அகாடமி
  • இசுரேலின் இசை

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] பொதுவான தகவல்கள்