புதன், 10 ஆகஸ்ட், 2011

பெற்றோர்களே உஷாராக இருங்கள்

பெற்றோர்களே உஷாராக இருங்கள்...


7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அப்பாவின் மேல் உள்ள கோபத்தில் விவேக்கை கடத்திவிட்டார்கள் அவனது அப்பாவின் எதிரிகள். யார் எதற்கு கடத்தினார்கள் என்றே தெரியவில்லை. போலீசாரும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள்.


விவேக்கிற்கு தெரிந்ததெல்லாம் அப்பா பெயர் அம்மாவின் பெயர் தான். இவனை யார் கடத்தினார்கள் எதற்கு என்றும் அவனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரே ரனகளமாகி இருந்தது அனைத்து வீட்டிலும் சோகம். எங்கு திரும்பினும் இதே பேச்சு. கிராமத்து பெரியவர் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது காவல் நிலையத்தில் இருந்து கந்தசாமி மகன் கிடைத்து விட்டான் சென்னையில் என்று. அப்புறம் ஊரில் இருந்து ஒரு 15 பேர் காவல் துறை அதிகாரிகளுடன் சென்னை சென்று விவேக்கை மீட்டு வந்தனர்.


விவேக் அங்கு நடந்ததை சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அவனை கடத்தியவர்கள் அவன் பள்ளியில் இருந்து வெளியே நிற்கும் போது இலந்த வடை வாங்கிக்கொண்டு இருந்து இருக்கிறான் ஒருவர் வந்து இன்னும் 2 வாங்கிக்கப்பா நான் உங்க அப்பாவின் நண்பன் தான் என்று சொல்லி வாங்கி கொடுத்து இருக்கிறான் நான் போகும் போது உங்க வீட்டிலி விட்டிவிடட்டுமா என கேட்க இவன் சரி என்றதும் அவனை ஒரு பைக்கில் அழைத்து பின் வேறு காருக்கு மாற்றி இருக்கிறார்கள். அடுத்த நாள் விழித்துப்பார்க்கும் போது கார் எங்க இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை அவனுக்க காரிலேயே இட்லி வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.


விவேக் சாப்பிட்டு விட்டு என்ன ஏது என்று தெரியாமல் அவனை மிரட்டி இருக்கிறார்கள் அவனும் புரியாமல் தவித்துக்கொண்டு இருந்திருக்கிறான். சாலை ஓரத்தில் பப்பாளி விற்றுக்கொண்டு இருந்திருக்கிறார்கள் இவன் பப்பாளி வேண்டும் என கேட்க அவர்களில் ஒருவன் கூட்டிக்கொண்டு போய் வாங்கி கொடுத்து உள்ளான் இவர்கள் சாப்பிடும் போது ஒரு காவல் துறை அதிகாரி அங்கு வந்து ஓரமாக பைக் நிறுத்தி தம் அடிக்க விவேக் சாப்பிட்டு விட்டு இன்னொன்று வேனும் என கேட்க ஒன்று தான் வாங்கித்தருவேன் என அவன் இவனை அதட்டி மிரட்ட விவேக் அவனை விட்டு ஓடி இருக்கிறான் ஓடி தடுக்கி விழந்து உள்ளான் அவனை அந்த காவல் துறை அதிகாரி தூக்கி குப்பைகளை தட்ட இதை பார்த்த கடத்தியவன் ஒதுங்கி விட்டான். அந்த அதிகாரியிடம் விவேக் முன்னுக்குப்பின் தவறான தகவல் தர அவர் அவனை அங்கு யாருடன் வந்தான் என அவர் தேட கடத்தியவர்கள் எஸ்கேப்.


விவேக்கிடம் அவனது அப்பா பெயர், அம்மா பெயர் மட்டும் சொல்லி இருக்கிறான் ஊர் பேர் கேட்க தாத்தா பாட்டி என பல ஊர்களை சொல்லி உள்ளான். அதிகாரிகளும் அவனிடம் ஒவ்வொருவராக பேச்சு கொடுக்க அதில் ஒரு பெண் அதிகாரி உங்க அப்பா உன்னை எங்க சினிமாவிற்கு கூட்டிட்டுப்போவார் என சொல்ல அவன் ஊர் பேர் சொல்லி தியேட்டர் பேர் சொல்லி இருக்கிறான் இங்க தான் நிறைய படம் பார்த்து இருக்கிறேன் என்று சொல்ல காவல் துறை அதிகாரிகள் அந்த ஊர் நிலையத்திற்கு போன் செய்து கேட்க ஆமாம் இங்க விவேக் என்ற சிறுவன் காணமல் போகிவிட்டான் அவன் தான் என்று சொல்ல அப்புறம் விவேக்கை மீட்டு உள்ளனர். விவேக்கிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 15 மணி நேரம் பேச்சு கொடுத்து உள்ளனர்..


விவேக் என்னும் என் நண்பன் என்னுடன் சென்னையில் பணியாற்றும் போது என்னிடம் கூறிய சம்பவம் இது.


இச்சம்பவம் மூலம் எனது கருத்து சிறுவயதில் குழந்தைகளிடம் அப்பாவின் பெயரையும், அவரது தொலைபேசி எண்ணையும் குழந்தைகளிடம் சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டால் குழந்தை எங்காவது காணமல் போனாலோ, எதாச்சையாக நம்மிடம் சொல்லாமல் சென்று விட்டலோ நீ யார் என கேட்டால் அப்பாவின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிறுவர்களுக்கு தெரிந்தால்  அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

மூக்குத்தி முத்தழகு...


மூக்குத்தியைப்பற்றி ஒரு காலத்தில் பல பாடல்கள் வந்து உள்ளன, அதற்கு காரணம் அப்போதெல்லாம் மூக்குத்திய பெண்களை நிறைய பார்க்க முடியும் ஆனால் இப்போது மிக மிக குறைவு....அழகாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. மூக்குத்தி குத்திய பெண்ணின் அழகு தனிதான். பெண்கள் மூக்குத்தி அணிந்திருந்தால் அவர்களின் அழகு மிளிர்கிறது என்பார்கள். மூக்குத்தி குத்துவது அமைத்தனம் என்றும் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். மூக்குத்தி அணிகலன் மட்டுமல்ல உடலுக்கும் நல்லது என்று கூறுகிறார்கள்.

கிராமப்புறங்கிளில் மூக்குத்தி அணிந்த பெண்கள் அதிகம் காணலாம் அன்று. இன்று மூக்குத்தி குத்திய பெண்களை கிராமம் மட்டுமல்ல எங்கும் பார்த்தாலும் கிடைக்கமாட்டர்கள் தேடினால் தான் கிடைப்பார்கள். முன்காலத்தில் பெண்கள் மூக்குத்தி அணிந்தது மருத்துவக்காரணம் அதிகம் அதனால் தான் மூக்குத்தி அணிந்துள்ளனர் காலப்போக்கில் அது அடிமைத்தனம் என்று கூறி கணவன் இறந்தால் பெண் மூக்குத்தியையும் கழட்ட வேண்டும் என்ற அடிமைத்தனத்தால் பல பெண்கள் மூக்குத்தி குத்துவதை தற்போது விரும்புவதில்லை. அதனால் மூக்குத்தி குத்திய பெண்களை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மூக்குத்தியை பெண்கள் பலங்காலத்தில் குத்தியதற்கு மருத்துவ காரணங்கள் தான் அதிகம்.மருத்துவ காரணங்கள்

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.  மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 
 
மூக்குக் குத்துவற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் கணவனை இழந்ததும் பெண் மூக்குத்தியைக் கழற்ற வேண்டுமென்பது  எப்படி வந்தது என்பது  தெரியவில்லை. அப்படிக் கழற்றும்  போதுதான் மூக்குத்தி அடிமைச்சின்னமாக மாறுகிறது.

சுதந்திரநாடு சோத்துக்கு கேடு

நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் அவர்களின் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். அவர்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால் தான் நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் திட்டலாம், அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கப்போகிறோம். உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்த நாம் இனி இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நம் சோத்துக்கு கேடு தான். இன்று நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். இன்றைய காலகட்டத்தில் விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம். விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

நம்ம வீட்டு டாக்டர்.....


இன்று நாம் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளோம் சாதரண தலைவலி வந்தால் மருத்துவரிடம் ஓடுகிறோம் அங்கு அவர் கண் பரிசோதனை, நரம்பு பரிசோதனை என சாதாரண தலைவலிக்கு 1000 ரூபாய் செலவு வைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் தானாக அத்தலைவலி தீர்ந்து விடும். நம் வீட்டில் நாம் உண்ணும் உணவில் உள்ளது நமக்கான நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதைத்தான் நாம் பாட்டி வைத்தியம் என்று கூறுகிறோம். 

பாட்டி வைத்தித்தால் பல நோய்கள் குணமாகின்றன ஒரு எல்லையை தாண்டியபின் மருத்துவமனைக்கு செல்லாம். நம் வீட்டுப்பொருட்கள் என்ன நோய்க்கு என்ன சாப்பிடலாம் என்று சில பொருட்களை தொகுத்து உள்ளேன். இன்னும் நிறைய பொருட்கள் உள்ளன அந்த தகவல்கள் எல்லாம் சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்....

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு , மோர் , உளுந்தவடை , பனங்கற்கண்டு , வெங்காயம் , சுரைக்காய் , நெல்லிக்காய் , வெந்தயக்கீரை , மாதுளம் பழம் நாவற்பழம் , கோவைக்காய் , இளநீர்.

ருசியின்மையைப் போக்குபவை
புதினா , மல்லி , கறிவேப்பிலை , நெல்லிக்காய் , எலுமிச்சை , மாவடு , திராட்சை , வெல்லம் , கருப்பட்டி , மிளகு , நெற்பொறி.

சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய் , பீட்ரூட் , முருங்கைக்கீரை , அவரை , பச்சைநிறக் காய்கள் , உளுந்து , துவரை , கம்பு , சோளம் கேழ்வரகு ,பசலைக்கீரை.

மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி , பாகற்காய், வேப்பிலை , நெய் , கடலைப்பருப்பு , கொத்தவரை , எருமைப்பால் . சோம்பு , வெள்ளரிக்காய்.

விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம் , பூண்டு , சிறுகீரை , வேப்பிலை , மிளகு , மஞ்சள் , காயம்பித்தம் தணிப்பவைசீரகம் , கருப்பட்டி , வெல்லம் , சுண்டைவற்றல் செவ்விளநீர் , அரைக்கீரை , எலுமிச்சை.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் தூர்நாற்றம்
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

விக்கலை நிறுத்த
ஒரு கரண்டி சர்க்கரை வாயில் போட்டு சுவையுங்கள் பறந்து போகும் விக்கல்.

இஞ்சி
மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

வெங்காயத்தில் என்ன இருக்கு?


வெங்காயம் இந்த சொல்லை நாம் அதிகம் கடிந்து கொள்ள பயன் படுத்துகிறோம். ஆமா பெரிய வெங்காயம் என்று அனைவரும் சொல்லதில் ஆச்சர்யமில்லை. உண்மையில் வெங்காயம் பெரியது தான் இதில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிலடங்கா. வெங்காயத்தை சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது. நம் தமிழ் மக்கள் வெங்காயத்தை பயன்படுத்தாமல் குழம்பு வைப்பது குறைவு. அதிக பேர் பயன்படுத்தும் சமையல் அறை பொருள் வெங்காயம். இவ்வெங்காயத்தால் ஒரு முறை ஆட்சி மாற்றமே நடந்து உள்ளது.

ஆங்கிலத்தில் 'Onion' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த 'ஆனியன்' என்ற வார்த்தைக்கு மூலமான 'இலத்தீன்' சொல்லான 'யூனியோ' என்பதற்கு 'பெரிய முத்து' என்று பொருளாம். பல வித உடற்கோளாறுகளையும் தீர்த்துவைக்கும் வெங்காயத்திற்கு இந்தப் பெயர் பொருத்தம்தானே?


'என் பெண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறும் மாமனார், மாமியாரிடம் 'கண்டிப்பாக வெங்காயம் நறுக்காமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று மாப்பிள்ளை சொல்வது பழைய கால நகைச்சுவைக்காட்சிகளில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்துவிட்டு நறுக்கினால் அவ்வளவாகக் கண் எரியாது, வெங்காயம் நறுக்குகையில் 'சூயிங் கம்' சாப்பிட்டால் கண் எரியாது என்று பல உத்திகள் கொடுக்கப்பட்டாலும் 'தன்னை வெட்டிக் கொல்பவரை, தனது அச்செயலுக்காக வருந்தி அழ வைக்காமல்' வெங்காயம் விடுவதில்லை. வெங்காயம் ஏன் கண்களைக் கலங்கடிக்கிறது தெரியுமா? அதில் உள்ள வேதிமமான 'அலைல் ப்ரொபைல் டை சல்பைடு' தான் இதற்குக் காரணம். இந்த ஒரு சங்கடம் தவிர, வெங்காயத்தால் மற்ற எல்லாமே நன்மை, நன்மை, நன்மையைத் தவிர வேறில்லை என்று அடித்துச் சொல்லலாம்.


வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

வெங்காயத்தின் பயன்கள்:

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது."

22)  கொஞ்சம் வெங்காயத்தை அரைத்து, உப்பு, வெறும் சோறு இவற்றுடன் கலந்து பிசைந்து வெற்றிலையில் வைத்துக் கட்டுப்போட்டால், நகச்சுற்று சரியாகும்.


23)  தேள் கொட்டிய இடத்தில் உடனடியாக வெங்காயத்தை நறுக்கித் தேய்ப்பதன் மூலமும், பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.


24)  சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் வெங்காயத்தை, விளக்கெண்ணெயில் வதக்கிச் சாப்பிடலாம். உடனடியாகப் பலன் உண்டாகும். வெங்காயம் சிறு குடல் அழற்சியைப்போக்கவும், குடல் பாதையை சுத்தம் செய்யவும்கூட உதவுகிறது.


25) மஞ்சள் வெங்காயம் இவற்றை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும். முகப்பருத் தொல்லை உள்ளவர்கள் வெங்காயத்தை நறுக்கி, பருக்களின் மீது தேய்க்க பருத்தொல்லை போயே போச்சு.

26) வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. புகை பிடிப்பதால் அல்லது தொழிற்சாலைகளில் மாசு கலந்த காற்றை சுவாசிக்க நேர்பவர்கள், வெங்காயச் சாற்றை அடிக்கடி அருந்திவர நுரையீரல் சுத்தமாகும். இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.


27) வீட்டிற்கு 'வண்ணம்' பூசுகிறீர்களா? அந்த நெடியைத் தாங்க முடியவில்லையா? உடனே இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நோயாளிகள் இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. எனவே, சமையல் செய்ய வெங்காயம் தேவையானால், நறுக்கி நீண்ட நேரம் வைக்காமல் உடனடியாகப் பயன்படுத்தி விடுவது நலம்.

மாரடைப்பை தடுக்கும் இஞ்சி


இஞ்சி உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு நறுமண பொருள். நறுமண பொருள் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நோய் நிவாரணி ஆகும். தமிழர்களின் உணவுகளில் இஞ்சிக்கு அதிக இடம் உண்டு. உலர்ந்த இஞ்சிக்கு சுக்கு என்று பெயர் சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்று கிராமங்களில் கூறுவார்கள்.

முன்பு கிராமங்களில் வாரத்திற்கு ஒரு நாள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காலையில் எழுந்து பல் துலக்கி காபிக்கு பதில் இஞ்சிசாறுடன் பால் கலந்த இஞ்சி காபியை பருகுவர் இஞ்சியின் காரம் தவிர்க்க நாட்டுச்சக்கரை கலந்து பருகுவர். வெறும் வயிற்றுக்குள் செல்லும் இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்து இஞ்சிகாபி சாப்பிடுவது மிகவும் குறைந்து விட்டது. வாரம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இஞ்சி காபி அருந்துவது அவசியம் இதை கடைபிடித்து பாருங்கள் உடல் பொலிவு பெறுவதுடன் சுறுசுறுப்பும் கிடைப்பதை உணரலாம்.

மாரடைப்பிற்கு அருமருந்து இஞ்சி: 

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும். 

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இஞ்சியின் குணப்படுத்தும் மற்ற நோய்கள்
 • சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
 • இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி       
 • இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
 • மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
 • தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
 • மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
 • இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
 • இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. 
 • மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
 • பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
 • ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
 • பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
 • இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
 • இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
 • இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
 • இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
 • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இன்று பலருக்கு உள்ள பிரச்சனை மலச்சிக்கல் சாப்பிடும் அளவிற்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாததால் இப்பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இது வெளியில் சொல்லதற்கும் நிறைய பேருக்கு கூச்சம் இருக்கும் இதனால் தான் படும் அவதியை மருத்துவரிடம் சொல்லி மருந்துக்காக செலவு செய்வதற்கு நம் வீட்டில் உள்ள இஞ்சியை தட்டிப்போட்டு வாரம் ஒரு முறை இஞ்சி சுக்கு காபியை அருந்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

உமாசங்கர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு என் ஆதரவு...

உமாசங்கர் இந்த பெயர் இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். இதற்கு காரணம் அவரது நேர்மை. இந்த நேர்மையான அதிகாரிக்கு ஆதரவாக உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் என்று நண்பர் அருண் பதிவிட்டு இருந்தார் வரவேற்க வேண்டிய பதிவு.

இன்று உமாசங்கர் நாளை யாரோ? உமாசங்கருக்கு மட்டுமல்ல நேர்மையான பணத்திற்கு அடிமையாகாத பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும், அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் என் ஆதரவு உண்டு.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"

HIV நம்பிக்கை மையம்


HIV தாக்கினால் என்ன செய்வது அதை எப்படி கையாள வேண்டும் என நான் திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை அவசியம் என்று ஒரு பதிவு இட்டு இருந்தேன் அதற்கு பல பின்னூட்டங்களிலும், மெயிலிலும் வருத்தப்பட்டும் அடுத்து என்ன செய்யலாம் என்றும் பல நண்பர்கள் சில அறிவுரைகள் கூறி இருந்தனர் அவர்களுக்கு என் சார்பிலும் என் நண்பன் சார்பிலும் நன்றி...

என் நண்பனின் தங்கை ரிசல்ட் வாங்கி சென்ற அடுத்த நாள் அவரே யாருக்கும் தெரியமால் அந்த ரிசல்ட்டைப் பார்த்து விட்டார். நல்ல தைரியமாகத்தான் இருக்கிறார். இதற்கு என்ன வழி என்று பலரிடம் ஆலோசனை கேட்டு நண்பரிடம் விளக்கினேன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மாதம் 8 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறி இருந்தார்கள் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள் நண்பனின் மாத வருமானம் குறைவு தான் தனது குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தங்கையையும் பார்க்க வேண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவில் அரசு மருத்துவமனைதான் சரி என்று முடிவு செய்தோம்.


கோவை அரசுமருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்திற்கு சென்றோம் அங்கு காலை 8 மணிக்கு ஒரு 10 பேர் காத்திருந்தனர் அங்கு இருந்த அதிகாரியிடம் இவர் என் நண்பர் அவரின் தங்கை என நடந்த அனைத்தையும் சொன்னேன். பொறுமையாக கேட்டு அருமையாக பதில் சொன்னார். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் மிக புரியும் படி விளக்கினார்.

நீங்கள் தனியாரிடம் பரிசோதனை செய்ததை நாங்கள் எடுத்துக்க மாட்டோம் நாங்கள் இங்கு இரத்தப் பரிசோதனை செய்து உங்கள் இரத்தத்தில் வைரஸ் கலந்து இருந்தால் அதற்கு அடுத்து இன்னும் சில பரிசோதனை செய்து இங்கு உள்ள மருத்துவர் இது வைரஸ் என்று உறுதி செய்த பின் தான் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று சொல்வார். உங்களுக்கு வைரஸ் இருப்பது உறுதியானலும் அது எந்த நிலையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து அதற்கு தகுந்த மருந்துகள் கொடுப்போம் என்றார். இது ஆரம்ப நிலையில் இருந்தால் நீங்கள் சத்துள்ள உணவு வகைகள் மற்றும் எந்த நோயும் தாக்காமல் பாதுகாப்பாக இருந்தால் நீண்ட நாள் நிச்சயம் வாழலாம் அப்படி வாழ்பவர்கள் இன்று நிறைய இருக்கின்றனர் என்றார். மேலும் வைரஸ் தாக்கபடபட்டவர்கள் சரியான மருந்து சாப்பிட்டு நன்றாக உள்ளவர்கள் இதே வைரஸ் தாக்கியவரை திருமணம் செய்து கொள்ளலாம் இன்று இது போல் நடக்கிறது தைரியமாக இருங்கள் என்று முகம் சுளிக்காமல் அன்போடு கூறினார்.

அவருக்குப்பின் வந்த ஒரு பெண் அதிகாரி அவரைப்போலவே நிதானமாகவும், நன்கு புரியும் படியும், எப்படி எதிர்கொள்ளலாம் என்று கூறி இரண்டு பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனை விவரம் வந்த பின் தான் மருத்துவரை அனுகவேண்டும் என கூறி தைரியம் சொல்லி அனுப்பினார்...

அடுத்து இரண்டு நாட்களுக்கு அனைத்து பரிசோதனையும் செய்துள்ளனர் (முதல் நாள் மட்டும் நான் உடன் சென்றேன்) நண்பனின் தங்கைக்கு HIV இரத்தத்தில் கலந்து உள்ளது மற்றபடி உடலின் எதிர்ப்பு சக்தியினால் அது அடுத்த நிலைக்கு செல்லவில்லை உங்கள் உணவுகளை சத்து உள்ள உணவாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் நோய் தொற்றும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் உடலில் உள்ள கலோரின் குறையாமல் இப்போது இருப்பது போலவே இருக்க உணவு தான் முக்கியம். அரசால் இலவசமாக அளிக்கப்படும் மருந்துகளை கொடுத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை: