புதன், 10 ஆகஸ்ட், 2011

சிரிப்போம் – சிந்திப்போம்

சிரிப்போம் – சிந்திப்போம்.
சிரிப்போம்.
பெரியோர்களே ! தாய்மார்களே !

எங்கள் அண்ணன் பி.ஜெ. யாரெனில் நான்கு மாபெரும் இமாம்கள், சஹாபாக்கள், நபிமாரகள் மற்றும் குர்ஆனையும் ஒரு கை பார்த்து, ஹதீஸ்களை ஆய்வு செய்வதில் இவர் ஓர் அண்ணாமலை. ஹதீஸோடு நின்றுவிடாமல் விஞ்ஞானத்திலும் நபி(ஸல்) மற்றும் சஹாபாக்களைவிட தான் சிறந்தவர் என்றும் ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சேட்டிலைட் எல்லாம் கிடையாது நம் கண் முன்னால் எல்லாம் தெரிய நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ? என்று சஹீஹான ஹதீஸ்களை தள்ளுபடி செய்து தனக்கே உரிய பாணியில் அதிரடியாய் கூறி அனைவரும் மூக்கின் உள்ளே விரல் வைக்கும் அளவு தனது விஞ்ஞானத்தை வளர்த்துள்ளார் எங்கள் பி.ஜெ.

யூத, கிறுஸ்துவ விஞ்ஞானிகளால் சொல்லப்படும் விஞ்ஞான கருத்திற்கு மாற்றமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கருத்துக்கள் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமே ! எனக்கூறும் பக்கீரன் பரம்பரையில் வந்தவர் எங்கள் குருநாதர் பி.ஜெ. அண்ணனின் பேச்சை கேட்டு யாருக்காவது உடல் fullஅரித்தால் நன்றாக சொரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அண்ணனால் நியமிக்கப்பட்ட "செட்டப் செல்லாப்பா" இலங்கை மெளலவி கேட்ட கேள்விக்கு விஞ்ஞானி பி.ஜெ. தந்த விஞ்ஞான பதிலை மட்டும் கீழே தந்துள்ளோம் கேட்டு உங்களது விஞ்ஞானத்தை வளர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்ணனை வசைபாடுவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறோம், அடுத்தவர்களை நோண்டி நொங்கு எடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆன எங்கள் அண்ணன் பி.ஜெ.-யை யாராவது நோண்ட நினைத்தால் அவர்களை போண்டியாக்குவோம். எங்கள் அண்ணன் பி.ஜெ. கற்றது கடல்அளவு கற்க வேண்டியது கைபிடி அளவுதான். விஞ்ஞானி பி.ஜெ. கையால் சுற்றி சுற்றி தந்த விளக்கத்தை பார்த்து தலை சுற்றாதவர்களே கிடையாது. எனவே அனைவரும் சுற்றி நின்று இவ்வீடியோ கிளிப்பை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.விஞ்ஞானி பி.ஜெ.

சிந்திப்போம்.


ஹதீஸ் : அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா ? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் ; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, வந்த வழியே திரும்பி விடு என்று அதற்கு உத்தரவிடப்படும் அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான், சூரியன் தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும் (திருக்குர்ஆன் 36 :38) என்னும் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.


(நூல் : புகாரி)
இஸ்லாத்திற்கு கலங்கம் கற்பிக்க விரும்புவோர் குறிப்பாக முஸ்லிமல்லாதோர் சொல்லும் பல காரணங்களில் ஒன்று "இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்பதுதான். இதனையே அண்ணன் பி.ஜெ. சற்று மாறுதலாக இஸ்லாமிய சாயம் பூசி (அப்பொழுதுதான் அண்ணனை அடையாளம் காண முடியாது என்பதற்காக) நபி(ஸல்) இப்பொழுதுள்ள விஞ்ஞானத்திற்கு மாற்றமாக சொல்லியிருக்க முடியுமா ? என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கூறி புகாரியில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்வதின் மூலம் "இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) விஞ்ஞானத்திற்கு எதிரானது, இக்காலத்திற்கு ஒவ்வாதது" என்ற காபிர்களின் கொள்கையை மறைமுகமாக கூறுகிறார் அவ்வளவுதான். இருவரும் கூறும் விதம் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்றுதான் என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை நன்கு வெளிப்படும்.

அண்ணன் பி.ஜெ. எதனை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கூறியதை நிராகரித்து தனது மனோஇச்சையை மார்க்க மாக்குகிறார் என்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம். இக்காலம்தான் யூத, கிறிஸ்தவர்களின் விஞ்ஞான வனர்ச்சிமிக்க நவீன காலம், நபி(ஸல்) அவர்களின் காலம் மெளட்டீக காலம் (நஊதுபில்லாஹ்) என்பதை சொல்லாமல் சொல்கிறார். எதனையும் அண்ணன் பி.ஜெ. கண்ணால் பார்த்துதான் ஈமான் கொள்வார் போலும் அல்லாஹ், சுவர்க்கம், நரகம், மலக்குமார்களை எவ்வாறு ஈமான் கொண்டுள்ளார் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். சூரியன், சந்திரன் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்த வல்ல ரஹ்மான் தனது ரசூலின் மூலம் சூரியனின் இயக்கம் பற்றி ஹதீஸாக சொன்ன விஷயம் பொய், யூத கிறிஸ்தவ விஞ்ஞானிகள் கூறுவதே மெய் என சொல்லாமல் சொல்லும் இம் மாபேதையின் கூற்றை நம்பியோரை என்னவென்று சொல்வது ? அல்லாஹ் பாதுகாப்பானாக.

இந்த சஹீஹான ஹதீஸ் சம்பந்தமாக விஞ்ஞானி பி.ஜெ.யிடம் கேட்கும் முதலாவது கேள்வி.
கேள்வி 1 : அண்ணன் பி.ஜெ. அவர்கள் கண்ணால் பார்த்து ஈமான் கொள்ள சேட்டிலைட் இல்லாத, சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பும் காலத்தில் வாழ்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்வாரா ? அல்லது தள்ளுபடி செய்வாரா ? தள்ளுபடி செய்தால் வழிகேடர் என்பது பச்சையாக விளங்கும். சரி சஹீஹ் என்று அக்காலத்தில் நம்பிவிட்டு இக்காலத்தில் யூத, கிறிஸ்துவ விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைபடுத்தி, நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி தனது யூகத்தை மட்டுமே ஆதாரமாக்கி இந்த ஹதீஸை தள்ளுபடி செய்வதன் மூலம், அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ? தூதரையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அல்லாஹ்வும் அவனது ரசூலும் கூறியவைகளில் தனது அறிவுக்கு எட்டாத விஷயங்களை பொய்யாக்குபவர்களைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கும் பொழுது :
அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும் (நிகழுமென) அதில் கூறப்பெற்றவை நிகழாதிருக்கையில் அவற்றையும், (அதில் கூறப்பெற்ற மற்றவைகளையும்.) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனெக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே !) நீர் கவனியும்.
(அல்குர்ஆன் 10 :39)

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய். அல்லாஹ்வும் அவனது ரசூலும் எதைச் சொன்னார்களோ அதுமட்டுமே மெய் என நம்புவதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படைக் கோட்பாடாகும். அல்லாஹ்வும் தனது திருமறையில் இறையச்சம் உடையவர்களின் தன்மைகளில் ஒன்றை குறிப்பிடும்பொழுது :

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) விசுவாசம் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 2 :3)

அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் நூறு சதம் உண்மையானது என்று நூறு சதம் ஈமான் கொள்வதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதனடிப்படையில் அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன விஷயங்களை ஆய்வு செய்வதினால் கிடைக்கும் விளக்கம் நமது ஈமானின் வளர்ச்சிக்கும், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலும் பேருதவியாய் இருக்கும். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வும் ரசூலும் சொன்னவைகள் உண்மையா ? பொய்யா ? என்ற அடிப்படையில் ஒருவர் ஆய்வு செய்வாரானால் அது குஃப்ரில் கொண்டு போய் சேர்க்கும். அல்லாஹ் அத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

இந்த ஹதீஸ் நூறு சதம் நபி(ஸல்) சொன்னதுதான் என்பதை நிரூபிக்கும் முன் அண்ணன் பி.ஜெ.யிடம் கேட்கும் இரண்டாவது கேள்வி.

கேள்வி 2 : நபி(ஸல்) இப்படி கூறியிருக்க முடியுமா ? என்று எவ்வித ஆதாரமுமின்றி யூகத்தின் அடிப்படையில் தங்களுக்கு தாங்களே கேள்வி கேட்டு, யூதர்களின் விஞ்ஞான கூற்றை உண்மை படுத்தி மேற்படி நபி(ஸல்) அவர்களின் சஹீஹான ஹதீஸை தள்ளுபடி செய்திருப்பதால், தங்களிடம் கேட்கும் இக்கேள்வியே தங்களுக்கு கேள்வியாகவும் பதிலாகவும் அமையும். நபி(ஸல்) இப்படி கூறியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்ன ?
மனிதன் தன் மரணத்திற்குப் பின் மட்டுமே காணக்கூடிய, ஈமான் கொள்ளப்பட வேண்டிய மறைவான விஷயங்களை அல்லாஹ்வும் அவனது ரசூலும் அறிவித்தாலன்றி எந்த கண்ணும் எந்த சேட்டிலைட்டும் அதனை காண முடியாது. உதாரணத்திற்கு சுவர்க்கம், நரகம் மற்றும் கப்ருடைய வாழ்க்கை. அந்த தரத்தில் வரும் மறைவான விஷயத்தை அறிவிக்கும் விஞ்ஞானப் பூர்வமான சஹீஹான ஹதீஸ்தான் மேற்கண்டது.

இந்த ஹதீஸில் உள்ள வாசகத்தை சற்று கவனித்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும். நபி (ஸல்) மேற்கண்ட ஹதீஸில் தெரிவிப்பது "சூரியன் அர்ஷூக்கு கீழே ஸஜ்தா செய்ய செல்கிறது " என்பதுதான். இந்த ஹதீஸில் அல்லாஹ்வுடைய அர்ஷ் இடம்பெற்றிருப்பதால் இது மறைவான விஷயமும் மனிதனால் அவனுடைய மரணத்திற்கு முன் காண இயலாத ஒன்று என்பதும் தெள்ளத் தெளிவு. அப்படியிருக்க எந்த சேட்டிலைட், சூரியன் அல்லாஹ்வுடைய அர்ஷை ஸஜ்தா செய்வதை படம் பிடித்து நமக்கு காட்டும் ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கக் கூடாதா ?

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஹதீஸ் திருக்குர்ஆனின் 36 :38ம் வசனத்திற்கு விளக்கமளிக்கும் ஹதீஸ். குர்ஆனுக்கு நபியின் விளக்கத்தை நிராகரித்து, யூத விஞ்ஞானிகளின் கூற்றை திணித்திருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. பின்பற்றுவது யூதரையா ?தூதரையா ?

அடுத்து சூரியன் மேற்கு திசையில் உதிக்க வேண்டுமெனில் பூமி திருப்பி சுற்றினால்தான்( ?!) அது சாத்தியமாகுமாம். இது சொன்னது யார் ? அல்லாஹ்வா ? அல்லது அவனது ரசூலா ? அடுத்தவர்களிடம் அனைத்திற்கும் குர்ஆனையும், ஹதீஸையும் ஆதாரமாகக் கேட்பவர்கள் தங்களுக்கு யூதர்களின் விஞ்ஞான கூற்றை ஆதாரமாக்குவது எவ்விதத்தில் நியாயம் ? சரி ஒரு வாதத்திற்கு விஞ்ஞானி பி.ஜெ.யின் யூத கூற்றை எடுத்துக்கொள்வோம். இது அண்ணனின் நம்பிக்கைக்கு நேர் மாறானது. இதனை விளங்கிக்கொள்ள நாமே சூரியன் மேற்கே உதிக்கும் நாளில் இருப்பதாக கற்பனை செய்வோம் அன்று காலை 6 மணி நம்முடைய எதிர்பார்ப்பு சூரியன் வழக்கப்படி கிழக்கில் உதிக்க வேண்டும். ஆனால் மாற்றமாக மேற்கில் உதயமாகும். இது சூரியன் தன் இடத்திலிருந்து இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். அப்படியின்றி அண்ணன் பி.ஜெ.யின் யூத கூற்றின் படி பூமி திருப்பி சுற்றுமேயானால் சூரியன் உதிக்காது மாறாக மறையும் எப்படியெனில் 6 மணி 5 மணியாக 4 மணியாக 3 மணியாக குறைந்துகொண்டு இருட்டாகுமே தவிர விடியாது. சூரியன் தன் இடத்தை விட்டு இடம்பெயர்ந்தால்தான் இது சாத்தியமாகும். இதைத்தான் நபி(ஸல்) தெளிவாகவும் விளக்கமாகவும் அறிவிக்கிறார்கள். இதனை பொய் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது ? நபி(ஸல்) தன் மீது பொய்யுரைப்பவரைப் பற்றி கூறியதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது.

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ' என் மீது பொய் சொல்லாதீர்கள் ! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்'
நூல் : புகாரி, முஸ்லிம்.

அண்ணன் பி.ஜெ. மற்றொரு யூத விளக்கத்தை தருகிறார் அதாவது சுற்றி கொண்டிருக்கும் பூமி திடீரென்று பிரேக் அடிப்பதால்தான்( ?!) கியாமத் நாளில் ஏற்படும் "ஜில்ஜிலத்" பூமி அதிர்ச்சி ஏற்படுகிறதாம் அதாவது பஸ்ஸில் போகும் பொழுது திடீரென்று பிரேக் போட்டால் நம்மை எவ்வாறு தூக்கியெறிகிறதோ அதுபோல் தூக்கியெறியுமாம் (அண்ணன் பி.ஜெ.யின் ஆதாரம்). அப்படியானால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பூகம்பங்கள், சுனாமிகள் போன்றவை பூமி போடும் 'திடீர்' பிரேக்கினாலா ? அல்லாஹ்வும் ரசூலும் கியாமத் நாளின் நிகழ்வு 'சூர்' எனும் எக்காலம் ஊதப்படுவதால் நிகழும் என அறிவித்திருக்க. அண்ணன் இப்படி பூமிக்கு திடீர் பிரேக் போடுவது சரியா ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக.

இறுதியாக இந்த நவீன இமாமின் புதிய கான்செப்ட் அதாவது ஹதீஸ் கலையில் இவர் கண்டுபிடித்த நவீன உசூல் "சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்பதுதான். இது விஷயமாகவும் நவீன இமாம் அண்ணன் பி.ஜெ.யிடம் ஒரு கேள்வி.

கேள்வி 3 : " சஹீஹான ஹதீஸ் குர்ஆனோடு மோதினால் ( ?!) நபி (ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியுமா ?" என்று சஹீஹான ஹதீஸை லயீஃப் ஆக்கும் தங்களின் இந்த நவீன உசூலின் படி ; " லயீஃபான ஹதீஸ் குர்ஆனோடு மோதவில்லையெனில், நபி(ஸல்) இப்படி சொல்லியிருக்க முடியும் ! " என்று லயீஃபான ஹதீஸை சஹீஹாக மாற்றலாமா ? ஏனெனில் மனிதன் என்ற அடிப்படையில் சஹீஹ், லயிஃப் இருபக்கமும் தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா ?
எனவே இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறிய சஹீஹான ஹதீஸ்தான் என்பதில் அனுவளவு கூட சந்தேகமில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸின் உண்மையான அர்த்தங்களை உல்டா பன்னி பிழைப்பு நடத்தும் புருடா அண்ணன் பி.ஜெ. ஹதீஸ்களை குர்ஆனோடு மோதவிட்டு ஹதீஸ்களையும், குர்ஆனின் உண்மை அர்த்தங்களையும் சிதைப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது புதிய TNTJ மார்க்கத்திற்காக "புதிய வேதம்" ஒன்றை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இது அண்ணனின் வெறும் வெள்ளோட்டம்தான் போகப் போக பாரு இன்னும் கொஞ்சம் புரியும்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி நபி(ஸல்) எச்சரித்த ஹதீஸ் ஒன்றை குறிப்பிட்டு விட்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறேன். வ ஆகிர தாவானா வஅனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

இம்ரான் இப்னு ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்குப்பின் நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அஞ்சுவது நாவண்மை மிக்க வேடதாரிகளைப் பற்றியே என்று நபி (ஸல்) கூறினார்கள்.
நூல் : தப்ரானி, பஸ்ஸார்

கருத்துகள் இல்லை: