புதன், 10 ஆகஸ்ட், 2011

இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை

இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை

இந்த தேசம் இந்நாட்களில் உலகத்துக்கு ஒரு தேவையில்லாத சுமை,பாரமான கல்.எல்லா நாட்களும் தொலைகாட்சி,வானொலி மற்றும் பத்திரிகைகளில் இதன் பெயர்.ஒரு சின்ன தேசம்,நியூஜெர்சி அளவே....சொல்லிகொள்ளும் படியான இயற்கை வளம் கிடையாது.பின் ஏன் எல்லோரும் இதை எதிரியாய் பார்க்கிறார்கள்.அது இன்னும் ஆச்சர்யம்.இங்கிலாந்திடமிருந்து விடுதலையாகி 1948 -ல் தனி நாடானார்கள்.அடுத்த நாள் முதலே போரும் சண்டையும்.அனைத்து அராபியர்களின் பயங்கர எதிரி.அமெரிக்காவுக்கு பாரமான தோழன்,இந்தியா ஹாய் சொல்வதோடு சரி,ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் சொல்லி கொள்ளும் படியான உறவு இல்லை.நீங்கள் இஸ்ரேல் போனதான ஸ்டாம்பிங் உங்கள் பாஸ்போட்டில் இருந்தால் எந்த அரபு நாடுக்குள்ளும் நீங்கள் நுழைய முடியாது.அரபு நாடுகள் இதை இன்னும் ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை.தினம் குண்டு வெடிப்புகள்.நியூயார்க் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு காரணமே அமேரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதுதான் என்கிறார்கள்.அதை தொடர்ந்து இனி மேலும் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்க கூடாது என அமெரிக்காவில் பேசப்பட்டது.இப்போது எல்லா நாடுகளும் இஸ்ரேல் விவகாரத்தில் அடக்கிவாசிக்கவே விரும்புகின்றன.இப்படியாய்எல்லோருக்கும் இஸ்ரேல் ஒரு பாரமானகல்.இதை பைபிள் 2000 ஆணடுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது. இனி உலகில் நடக்கப்போகும் அநேக நிகழ்வுகழுக்கு இந்த நாடு முக்கிய காரணமாக அமையும்.நம்பினால் நம்புங்கள்.

சகரியா:12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூ

கருத்துகள் இல்லை: