புதன், 10 ஆகஸ்ட், 2011


ஈழமுரசு கலைநிகழ்வு

காணொளி இணைப்பு

துயர்துடைப்புமாத வேண்டுதல்

பணி விளக்கம் I IIரேடியோதொன் படிவம்ஊடக அறிக்கைசத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

நாடுகடந்த தமிழீழஅரசுஅக்கம் பக்கம்

ஹெட்லைன் ருடே சிறிலங்காவின் கொலைக்களம் விவாத அரங்கு!அனைத்துலக கூட்டுறவு நாள் - 2011 சிறப்பு கட்டுரைICC Issues Arrest Warrant for Gadhafi

இலங்கை அப்பாக்களுக்கு!!!!Dr.Sithamparanathan Sabesan receives national entrepreneurship award and UK ICT Pioneers Awardநேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?மேலும் வாசிக்ககேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?மேலும் வாசிக்கவெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.மேலும் வாசிக்க

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.மேலும் வாசிக்க

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.மேலும் வாசிக்க

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..மேலும் வாசிக்க

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.மேலும் வாசிக்கபுத்தாண்டு கௌரவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்புமேலும் வாசிக்கஉங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்

பதிவு செய்துகொள்வேன்

பதிவு செய்யமாட்டேன்

இப்போது சொல்லமுடியாது

சொல்ல விரும்பவில்லைஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி26-01-2011 நம்பிக்கைஒளி19-01-2011 நம்பிக்கைஒளிமேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா12-01-2011 நம்பிக்கைஒளி05-01-2011 நம்பிக்கைஒளிதமிழர் புனர்வாழ்வுக்கழகம்TRO பணிவிளக்கம்

ரேடியோதொன் ஊடக அறிக்கை

ரேடியோதொன் படிவம்புலிகளின் குரல்அறிக்கை 2010 ஒலிவடிவம்சீமானுடன் நேர்காணல்போர்க்குற்ற காணொலிகள்

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்மேலும் வாசிக்க

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.மேலும் வாசிக்க

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.மேலும் வாசிக்க

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரைமேலும் வாசிக்கதமிழீழ அரசு யாப்பு

உற்சாகமாக விழித்தெழ....

செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2011 19:20 பாலகார்த்திகா

காலைப்பொழுது பொதுவாக உற்சாகம் தரும் நேரம். படிக்கவோ, தியானம் செய்யவோ, முக்கியமான வேலைகளை முடிக்கவோ, பாடிப் பயிற்சி செய்யவோ.... எதுவாக இருந்தாலும் காலைப்பொழுதுதான் சிறந்தது என்பது பொதுவான கருத்து. ஏனெனில் இரவு முழுவதும் தூங்கி, காலையில் விழித்தெழுந்தால் புத்துணர்வு பொங்கிவரவேண்டும்.ஆனால், காலை எழும்பொழுதும் சோர்வாகவே உணருகிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல... இன்னும் பலரும் இந்தத் தொல்லையால் அவதிப்படுகிறார்கள். இப்பிரச்னையில் இருந்து மீண்டு, உற்சாகமாகக் காலைப்பொழுதுகளை வரவேற்கவேண்டுமா? கீழ்க்கண்ட சில முறைகளைப் பின்பற்றிப்பாருங்களேன்.நிம்மதியான உறக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது:1. இரவு உணவானது பொதுவாக, படுக்கைக்குச் செல்லும் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே உட்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக, இரவு நெடுநேரம் கழித்து காபி அருந்துவது, மது அருந்துதல் முதலியவை உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும். இரவு உணவில் அதிகப்பகுதி பழங்கள், காய்கறிகளாக இருப்பதும், மிக எளிமையான உணவாக இருப்பதும் மிக மிக முக்கியம். இரவில் மிதமான சூட்டில் பால் அருந்துவது நல்லது. ஆனால் குளிர்பானங்கள், அதிக சூடான பானங்களுக்குத் தடை விதியுங்கள்.2. இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். (எப்பொழுதுமே தவிர்ப்பது மிக நல்லது) கூடிய வரையில் மகிழ்ச்சியான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருத்தல் இவை நல்ல தூக்கத்திற்கு அஸ்திவாரம் அமைக்கக் கூடியவை.3. இரவு படுக்குமுன், மனத்தை அமைதிப்படுத்துவது, நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். எனவே, தியானம் செய்தல், இறை வழிபாடு இவற்றை மேற்கொள்ளுங்கள். பத்து நிமிட தியானம் அல்லது பிரார்த்தனை போதுமானது. இறைவனிடம் எதுவும் வேண்டுகோள் வைத்துப் பிரார்த்தனை செய்வதை விட, இதுவரை அவன் தந்தவற்றுக்கு நன்றி செலுத்துவது அதிகப் பலனளிக்கும்.4. கோபம், எரிச்சல், வெறுப்பு ஆகிய உணர்வுகள் தூக்கத்திற்கு எதிரி. நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, இரவு படுக்கைக்குச் செல்லுமுன் நன்றிக்குறிப்பு எழுதும்படி அறிவுறுத்துவார். 'அன்றைய தினத்தில் உங்களுக்கு உதவி புரிந்த ஐந்து பேருக்கு நன்றி தெரிவித்து நாட்குறிப்பில் எழுதிவிட்டுப் படுங்கள். நல்ல தூக்கம் நிச்சயம்.' என்பார் அவர். கடைப்பிடித்துப் பாருங்களேன்.5. செடி வளர்ப்பது நல்ல பழக்கம்தான். காலையில் எழுந்ததும் பசுமையான தாவரத்தைப் பார்ப்பதும் நல்லதுதான். ஆனால், உங்கள் மூடிய படுக்கையறைக்குள் செடி வளர்க்கக் கூடாது. எளிய அறிவியல்தான். செடிகளும் இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. எனவே, படுக்கையறைக்குள் செடிகள் - வேண்டவே வேண்டாம். இதனால் உங்கள் புத்துணர்ச்சி குறைகிறது. இரவு தூக்கத்தின்பொழுது ஆக்சிஜன் உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டால்தான், உடல் உறுப்புகள் புத்துணர்வு பெற இயலும்.6. குளிரூட்டப்பட்ட அறையைப் பயன்படுத்துகிறீர்களா? (குளிர்ப்பிரதேசங்களில் கணப்பைப் பயன்படுத்துபவர்களுக்கும்தான்.) உங்கள் அறை வெப்பம் மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ இருப்பின் அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்கிறது.7. இரவு உடைகள் தளர்வாகவும், உங்கள் ஊரின் தட்பவெப்பத்துக்கு ஏற்றதாகவும் இருப்பது அவசியம்.8. தலையை உட்பட மூடிக்கொண்டு சிலர் உறங்குவார்கள். இதைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. மீண்டும். இது நாம் தூக்கத்தின் பொழுது கரியமில வாயு சுவாசிப்பதை அதிகரிக்கிறது.9. உங்கள் அறையின் சன்னல்கள் லேசாகத் திறந்து வைக்கப்பட்டு, நீங்கள் இயற்கையான காற்றோட்டத்தில் உறங்குவது மிக நல்லது.10. படுக்கையில் எத்தனை மணி நேரம் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எத்தனை மணிக்குத் தினந்தோறும் படுக்கச் செல்கிறோம், எத்தனை மணிக்கு எழுகிறோம் என்பது முக்கியம். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரத்தில் படுக்கச் செய்வதால் உடலில் உயிரியல் கடிகாரம் குழம்பிவிடுகிறது.

'Early to bed; early to rise

Keeps the man healthy

Wealthy and wise' - என்ற குழந்தைப்பாடல் நூற்றுக்கு நூறு உண்மை.11. படுக்கையறை கூடியவரை அமைதியாக இருப்பது முக்கியம். படுக்கையறையில் ஒருவர் செல்பேசியில் பேசிக்கொண்டு, குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, மற்றவர் தூங்க முயற்சித்தால்.... சுத்தமாகப் பலனில்லை. உங்கள் வீட்டினருகில் வாகனப்போக்குவரத்து, புகைவண்டிப்போவரத்து இவை இருக்குமானால், காதுகளை ear plug பயன்படுத்தி மூடிக்கொண்டு படுக்கலாம்.12. படுக்கையறையில் விடிவிளக்கு அவசியமில்லை. உங்களுக்கு வேண்டுமென்று தோன்றினால், மிக மிகக் குறைந்த ஒளி தரும் நீல நிற பல்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.காலை விழித்ததும் செய்யவேண்டியது:1. கூடியவரை காலையில் நம்மை எழுப்புவதற்கு கடிகாரத்தை நம்பாமல், நம் உள்ளுணர்வை நம்புங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், உங்களது இடதுகைப் பெருவிரல், உள்ளங்கையுடன் சேருமிடத்தில் உள்ள மேடான பகுதியை, வலதுகைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு 'நான் நாளை காலை ஐந்து மணிக்கு விழித்தெழுவேன்' என்று சொல்லுங்கள். இவ்வாறு மூன்று முறை செய்யுங்கள். மறுநாள் காலை 'டாண்' என்று ஐந்து மணிக்கு உங்களுக்கு விழிப்பு வந்துவிடும். (ஆனால், படுக்கையை விட்டு நீங்கள் எழாமல், மீண்டும் உறங்கிப்போனால் நான் பொறுப்பல்ல.)2. இதில் நம்பிக்கை இல்லையா, அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அது அடித்தவுடன் எழுந்துவிட வேண்டும், அதைத் தலையில் தட்டிவிட்டு இன்னும் பத்து நிமிடம் கழித்து எழலாம் என்று நினைப்பதோ, 'snooze' பொத்தானை அழுத்தி அழுத்தி நேரம் தாழ்த்துவதோ காலை நேர உற்சாகத்தை இன்னும் குறைத்துவிடும். விழிப்பு வந்தவுடன் துள்ளி எழுந்து விடுங்கள். கண்டிப்பாக புத்துணர்வு உண்டாகும்.3. காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, சில்லென்று ஒரு தம்ளர் நீர் அருந்துங்கள்.(மிகவும் குளிரவைக்கப்பட்ட நீர் அல்ல, சாதாரணத் தண்ணீர்) நீர் உங்கள் சோம்பலை விலக்குவதோடு உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.4. காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சாலச் சிறந்தது. அதனால் வழக்கத்தைவிட நீங்கள் அதிக ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருப்பதை உணரலாம். வீட்டிற்குள் 'Tread mill' போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நடப்பதைவிட வெளியில் காலார நடப்பதே நல்லது. காலை நேரக் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் இருப்பதே இதற்குக் காரணம்.5. அப்படி வெளியில் நடைப்பயிற்சி செய்ய இயலவில்லையா, வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யுங்கள். அதிக நேரம் ஒதுக்க இயலாவிடினும் அனைத்து உறுப்புக்களையும் தூண்டும் Warm up exercise மட்டுமாவது செய்யுங்கள். இது உங்கள் உடலை நன்முறையில், நல்ல உடல்நலத்துடன் வைக்கிறது. உடல் நன்றாக இருந்தாலே மனதிலும் உற்சாகம் உண்டாகும். உடல் சோர்ந்தால் மனமும் சோர்வடைந்துவிடும். 'உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர்.6. காலைப்பொழுதில் மூச்சுப் பயிற்சி செய்வது மிகுந்த பலனை அளிக்கும். தகுந்த ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது நல்லது. முடியாவிடில், குறைந்த பட்சம், சிலமுறை (5-10 நிமிடங்கள்) மூச்சை ஆழ இழுத்து விடுங்கள்.7. மிகவும் சோர்வாகவோ, தலைவலி போன்றவற்றின் தொந்தரவு இருந்தாலோ மட்டும் காபி அருந்துங்கள். இல்லையெனில், எலுமிச்சைச் சாறு, தக்காளிச்சாறு போன்றவை, Green Tea, Lemon Tea இவற்றை அருந்துவது நல்லது.இவ்வளவுக்கும் மேலாக, இன்னொரு புதிய நாளை வழங்கியமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லி, இந்த நாள் இனிய நாளாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடங்குங்கள். எல்லா நாளும் பொன்னாளாகும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை: