வியாழன், 11 ஆகஸ்ட், 2011

இந்துக்களாகி விடுவார்கள் – இமாம்

இந்துக்களாகி விடுவார்கள் – இமாம்

இந்திய முஸ்லிம்கள் சட்டத்தை மதித்தால் இந்துக்களாகி விடுவார்கள்.
இப்படி சொல்பவர் பாகிஸ்தானிய புகழ்பெற்ற ஜமாதுத்-தாவா அமைப்பின் தலைமை இமாம் முஃப்டி அப்துர்ரஹ்மா னுர் ரஹமானி அவர்கள்.
“And if Mufti Habibur Rehman tells Indian Muslims to comply with Indian law, then the coming generations of Muslims in India will be involved in Hindu beliefs,” said Rehmani.
இப்படி இவர் சொன்னது இஸ்லாமியர்களின் மனப்பாங்கை தெளிவாக காட்டுகிறது.   எந்த நாட்டு சட்டத்தையும் மதிக்காமல் அவர்களின் ஷரிஇய்யா காட்டுமிராண்டித்தன சட்டத்தை மட்டுமே அவர்கள் ஆதரிக்கிறார்கள்.
இதை மேலும் விமரிசிப்பதற்கு முன் இதன் பிண்ணனியைப் பார்ப்போம்.
உத்தரபிரதேசத்தை அடித்தளமாக கொண்ட தாருல் உளூம் தியோபந்தி என்ற அமைப்பு சமீப காலமாக நல்ல நகைச்சுவை ஃபட்வாக்களை அறிவித்து வருகிறது.
“இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், அதில் வன்முறைக்கு இடமில்லை” என்று இவர்கள் அறிவித்து இந்திய ஊடகங்களில் சமீப காலத்தில் பேசப்பட்டனர்.    ஆனால்,  இந்த ஃபட்வா ஒரு உண்மையான வெளிப்பாடு அல்ல,   மாறாக இஸ்லாமியர்களின் தக்கியா என்கிற ஏமாற்று வேலையின் ஒரு அங்கம் என்றே இதை ஆராய்ந்த இஸ்லாம் விமர்சகர்கள் சொன்னனர்.   அதற்கு ஏற்றாற்போல்,  இந்த ஃபட்வாவிற்கு மற்ற பெரிய இயக்கங்களிடமிருந்து யாதொரு ஆதரவும் ஏற்படவில்லை.
இந்திய முஸ்லிம்கள் இந்துக்களின் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு சூழலால், அவர்கள் தங்கள் சமூகத்தின் பொதுமுக வெளிப்பாட்டிற்கும்  உண்மை குறிக்கோளுக்கும் இடையே பல மாறுபாடுகள் வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள்.
இந்த மனநிலையில் உள்ள இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் உண்மை வாழ்க்கை முறையாக எதை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு நாம் நம் அண்டை சகோதர நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் வாழ் இஸ்லாமியர்களின் அணுகுமுறையை பார்த்து அறியலாம்.  ஏனென்றால்,  இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் மக்களாட்சி பலத்தை பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்த பன்முக இந்திய சமுதாயத்தை தகர்த்து உண்மையான இஸ்லாமிய “தூய” சமுதாயத்தை நிறுவ கனவு காண்கிறார்கள் என்பதற்கு நம் பிராந்திய நிகழ்ச்சிகள் நமக்கு இடைவிடாமல் அறியத்தருகின்றன.
உதாரணமாக, சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் ஆண்கள் தாடியை சரைத்துக்கொள்ள தடை விதித்தார்கள்.  இந்த காட்டுமிராண்டித்தனமான இவர்களின் இஸ்லாமிய பார்வை உண்மையான இஸ்லாமிய பார்வை இல்லை என்று ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி -  தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள்.   இவர்கள் முறையாக இஸ்லாம் மதக்கோட்பாடுகளை நேரடியாகவும், முழுமையாகவும் அறிந்தவர்கள்.    அவர்களுக்கும் இதர இஸ்லாமிய ஏமாற்றுக்கருத்தாளர்களுக்கும் உள்ள இரண்டு வேறுபாடுகள் – தலிபான்கள் உண்மையான இஸ்லாத்தை நடைமுறைப் படுத்த ஆர்வம் கொண்டவர்கள்.   இந்த இஸ்லாமிய ஏமாற்றுக்கருத்தாளர்களோ, மாறாக,  உண்மையான இஸ்லாத்தை நன்றாக அறியாதவர்கள்.   இரண்டவதாக,  தலிபான்கள் முஸ்லிம்களின் அரசு (அல்லது ஆதிக்க) நிலையில் பலமாக இருக்கும் சூழலில் இருப்பவர்கள்.   அதனால், அவர்களால் நேர்மையாக நடந்துகொள்ள முடிகிறது.   ஆயின்,  இதர இஸ்லாமிய தக்கியாக்காரர்களோ சிறுபான்மை அரசியல் பலமாக இருப்பதால் கொஞ்சம் அடக்கி (அதாவது தக்கியா செய்து) வாழ வேண்டியிருக்கிறது.
இந்த தாருல் உளூம் தியோபந்தி இரண்டாவதாக ஒரு ஃபட்வா விட்டார்கள்.     உத்தர பிரதேசத்தில் பசுவதை சட்டம் இருப்பதால் பசுக்களை சட்ட விரோதமாக அங்கு வதைப்பது இஸ்லாமிய விரோதம் என்று ஃபட்வா போட்டார்கள்.
இந்த ஃபட்வாவில் இவர்கள் சொன்ன நியாயத்தின் படி,   இப்படி சட்ட விரோதமாக பசுக்களை முஸ்லிம்கள் கொல்வதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரச்சனையும் அவப்பெயரும் ஏற்படுகிறது.    அதனால்,  முஸ்லிம் சமுதாயம் அரசாங்கத்தில் பலவீனமாகிறது.   தம் சமுதாயத்தை பலவீனப்படுத்தும் எந்த வழியும் ஹராம் ஆகும்.  அதனால், இதை முஸ்லிம்கள் செய்ய கூடாது என்று சொன்னார்கள்.
அதாவது,  இது மாதிரி சட்ட விரோத காரியங்கள் செய்தால் பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள்.  பின்னால், பல “நல்ல” காரியங்களுக்கு நீங்கள் உதவ மாட்டீர்கள்.   அதனால், இதை நிப்பாட்டுங்கள் – என்று பொருள்.
இவர்கள் மேலும் சொல்லி,  எங்கெல்லாம் பசுவதை தடை இல்லையோ (கேரளா மாதிரி ) அங்கெல்லாம் தாராளமாக இதை செய்யுங்கள் -  என்று சொன்னார்கள்.
அதாவது,  சட்டத்தை மதித்து நடங்கள் – என்று சொல்ல முஸ்லிம்களுக்கு ஃபட்வா தேவையாய் இருப்பது அதிசயம்.   அதுவும்,   அந்த சட்டத்தை மதிக்காவிட்டால், மாட்டிக்கொள்வோம் அதனால் இது வேண்டாம் – என்று இதற்கு லாஜிக் சொன்னது அதைவிட அதிசயம்.   இது இஸ்லாமியர்களின் இன்றைய மனநிலையை காட்டுகிறது.
ஆனால், இந்த பசப்பல் கூட இஸ்லாமியர்களுக்கு எரிச்சலாக வருகிறது.  இதை நம் சகோதர இஸ்லாமிய அமைப்பான மேலே சொன்ன பாகிஸ்தான் அமைப்பு மறுத்திருக்கிறது.
அவர்களின் அறிக்கையை மேலே லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்.
இந்தியாவில் சட்டம் என்ன சொன்னால் என்ன?  அந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு ஏற்பானதாக இல்லாவிட்டால், அதை உடைப்பிலே போடு – என்பது இவர்கள் வாதம்.
இஸ்லாமியர்கள் பன்முக மக்களாட்சிக்கு தகுதியற்றவர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.
அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் வெட்க கேடானது.    இப்படி இஸ்லாமிய சட்டத்திற்கு புறம்பான இந்திய சட்டத்தை மதித்தால் அவர்கள் இந்துக்களாகி விடுவார்களாம்.
கொடுமையடா சாமி!
இஸ்லாம் எவ்வளவு பலவீனமாக இருந்தால் இப்படி சட்டத்தை கண்டு “இந்துக்களாகி விடுவார்கள்” என்று இவர்கள் பயப்படுவார்கள்.
இந்திய இஸ்லாமியர்கள் ஆதி இந்துக்கள்.   இந்திய இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் பல இந்து தாக்கங்களை கொண்டுள்ளனர்.   இந்திய இஸ்லாமியர்கள் இஸ்லாத்தின் உண்மையான வெறுப்பு மற்றும் ஆதிக்க கோட்பாட்டை இன்னும் வெறித்தனமாக ஆதரிக்கவில்லை.
இம்மூன்று காரணங்களால்,  இந்திய இஸ்லாமியர்கள் இப்போது இஸ்லாத்தின் பிடிப்பு இறுகாமல் இருக்கிறார்கள். அதனால்,  இவர்கள் இந்துக்களாகி விடுவார்கள் என்று உள்ளுக்குள் பயப்படுகிறார்கள்.
தாடியை மழிக்க கூடாது என்று தலிபான்கள் போட்ட காட்டுமிராண்டி சட்டத்திற்கு பாகிஸ்தானிலோ,  இந்தியாவிலோ ஒரு முணுமுணுக்கும் மறுப்பு கூட எழவில்லை என்பதை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டும்.   இஸ்லாமியர்கள் இம்மாதிரி சட்டங்களால் அருவருப்பு அடையவில்லை,  இம்மாதிரி வன்முறை திணிப்பால் மத சடங்குகளையும், குறிகளையும் பரப்புவதை எதிர்க்கவில்லை என்பதை நாம் காண்கிறோம்.    இஸ்லாமியர்களுக்குள்ளேயே இப்படி இவர்கள் நினைத்தால் மற்ற கிருத்துவ, இந்து காபிர்களை இவர்கள் வன்முறையில் “புனித” படுத்தி முஸ்லிம் ஆக்க ஆசைப்படவில்லை என்று எப்படிச்சொல்ல முடியும்?

கருத்துகள் இல்லை: