வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்...

அம்ரிப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நாம் நபி(ஸல்) அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது அண்ணலாரிடம் “கொன்ஸ்தாந்து நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றிகொள்ளப்படும்?” என வினவப்பட்டது. அதற்கவர் “ஹிரகல் மன்னனின் நகரம் – கொன்ஸ்தாந்து நோபிள் – தான் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.- முஸ்னத் அஹ்மத் : 6645
கொன்ஸ்தாந்து நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை  அரபு மொழியில் குஸ்தன்தீனியா என்றழைக்கப்படுகிறது. அன்று இறுதி தூதரின் காலத்தில்  பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த  இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது  . ஒன்று; ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். மற்றையது; கொன்ஸ்தாந்து நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு எனப்பட்டது. பெரும் வல்லரசாகத் திகழ்ந்த இந்நகரம் ஒரு நாள் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்படுமென நபியவர்கள் கூறினார்கள் ‘கொன்ஸ்தாந்து நோபிள் ஒரு வீரனால் வெற்றிகொள்ளப்படும். அத் தளபதிதான் சிறந்த தளபதி. அந்த படைதான்  சிறந்த படை  என்றார்கள். -முஸ்னத் அஹ்மத்

கருத்துகள் இல்லை: