புதன், 5 அக்டோபர், 2011

அரபி எழுத்துக்களும் உச்சரிப்பும்

அரபி எழுத்துக்களும் உச்சரிப்பும்
Audio source from www.madinaharabic.com
Compiled by Mufti
Best Media Player: Real Player.  Also set Real player as default.
For better view of Arabic letters install Traditional Arabic Font
ஆடியோ ஓசையை கேட்க அரபி எழுத்துக்களின் மேல் கிளிக் செய்யுங்கள்.எண்
உச்சரிக்கும் விதம்
படத்தின் மூலம் விளக்கம்
உச்சரிப்பு
(ஆடியோ)
பெயர்
(ஆடியோ)
1
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவை உயர்த்த வேண்டாம். குரல் அடித் தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.
اَ ا
2
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டும். பற்களைச் சேர்க்க வேண்டாம். நாவை மேலே உயர்த்த வேண்டாம். குரல் அழுத்தமாக வெளிப்பட வேண்டும்.
بَ ب
3
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் நுனிப்பகுதியை மேல் முன் பற்களிலும் அவற்றின் ஈறிலும் இலேசாக அழுத்த வேண்டும். குரல் நடுத்தரமாக ஒலிக்க வேண்டும்.
تَ ت
4
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு பற்களையும் சேர்க்க வேண்டாம். நுனிநாக்கு மேற்பல்லைத் தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டும். நுனிநாக்கு, பல்லை விட்டும் சற்று வெளியே வரவேண்டும். குரல் மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.
ثَ ث
5
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் மத்திய பகுதி மேல் வாயை அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் அழுத்தமாக இருக்க வேண்டும்.
جَ ج 
 
 
 
 

கருத்துகள் இல்லை: