புதன், 17 ஆகஸ்ட், 2011

விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து Refer this Page to your friends ஆக்கம், தொகுப்பு: அபூ அரீஜ்

விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள் சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து
ஆக்கம், தொகுப்பு: அபூ அரீஜ்
அளவற்ற அருளாளனின் திருநாமம் போற்றி.


01: பெருவெடிப்புக் கொள்கை (
Big Bang Theory):
கிட்டத்தட்ட 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் புகை மண்டலமாக ஒன்றாக இனைந்து இருந்தவைகள், Big Bang எனப்படும் ஒரு பெருவெடிப்பு மூலமாக தனித்தனியே வெவ்வேறாகப் பிரிந்தன என மேற்கத்திய விஞ்ஞானிகள் 1973 ம் ஆண்டு நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த உண்மை உணர்த்தப்படுமுன்னர் உலகின் உருவாக்கம் பற்றி பற்பல கற்பனைக் கதைகளைத் தான் முன்னைய நூற்கள் புனைந்தன. ஆனால் அல்-குர்ஆனோ 1400 வருடங்களாக இந்த 'பெருவெடிப்புக் கொள்கை" எனப்படும் நிகழ்வின் மூலமாக ஏற்பட்ட உலக உருவாக்கம் பற்றி ஒரு மாபெரும் விஞ்ஞானி கூறினால் எவ்வாறு இருக்குமோ அதை விடத் துள்ளியமாகக் கூறியிருப்பதை நாம் பார்க்க முடிகின்றது!

இச்செய்தியை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

قال تعالى:[أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقاً ففتقناهما]- الأنبياء/ 30

'வானங்களும், பூமியும் இனைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும்..(நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?" - (21:30)

பாலைவனம் தாண்டிச் செல்லா பல்லவிக் காலத்தில் இம்மாபெரும் வானவியற் கூற்றினை முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எவ்வாறு கூற முடிந்தது!

ஆக, அல்-குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இதைவிட வேறு சான்றே தேவையில்லை.


02: நாளுக்கு நாள் விரிவடையும் அண்ட வெளி
(Expanding Universe):

Expanding Universe நிகழ்ந்த பின் கோடிக்கணக்கன நட்சத்திர மண்டலங்கள் சிதறி ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பதால் இப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது என Adamic Arow  எனும் விஞ்ஞானியே முதலில் இது பற்றிக் கூறுகிறார்.

இப்பிரபஞ்சம் சுமார் 100 பில்லியன் ஆண்டுகள் வரை விரிவடைந்து கொண்டே செல்லும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பூமிக்கு மிக அருகில் உள்ள Proxima Centauri நட்சத்திரம் 25 பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. இன்னும் பல நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்து சேரவே இல்லை. இப்பிரபஞ்சம் பரந்து விரிந்து கொண்டே செல்கின்றது.
ஆதாரம்: The World Book Encyclopedia, NASA, Ames Research Center, California, USA.

இதனை அல்-குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
قال تعالى:[والسماء بنيناها بأيد وإنا لموسعونٍ] - الذاريات/ 47

'வானத்தை வலிமை மிக்கதாகப் படைத்தோம். நிச்சயமாக விரிவாற்றல் உடைய(
Expanding Universe)வராவோம்." -(51:47)
அடுத்த தொடரில்.  கோள்களின் இயக்க விதி பற்றிப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ

கருத்துகள் இல்லை: