புதன், 3 ஆகஸ்ட், 2011

aliuo tarum taliuo\..அழிவு தரும் தெளிவு



وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنْ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنْ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرْ الصَّابِرِينَ(155)الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ(156)أُوْلَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُوْلَئِكَ هُمْ الْمُهْتَدُونَ(157) البقرة
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ

21 ம் நூற்றாண்டு தொடங்கியது முதல் கடும் துயரங்களை மனித சமூகம் சந்தித்து வருகிறது.

வெள்ளம், வெப்பம், புயல், பூகம்பம் சுனாமி உயிர்கொல்லி நோய்கள் என அடுக்கடுக்கான சோதனைகளுக்கு உள்ளானது.

ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் நில நடுக்கங்கள் ஏற்ப்டுகின்றன. நில நடுக்கத்தை ரிக்டர் அளவு கொண்டு கணக்கிடுகிறார்கள். பாதிப்பு 6 ரிக்டரை கடக்கும் போது கட்டிடங்கள் இடியும்.

தரையில் ஏற்படும் நில நடுக்கம் பூமியை பிளக்கும்: கட்டிடங்களை உடைக்கும் என்றால் கடலில் ஏற்படும் நில நடுக்கம் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தும்.

பூகம்பங்கள் மிக்கடுமையானவை. நிமிஷ நேரத்தில் செழிப்பான நகரத்தை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்து விடக்கூடியவை. அதே போல முன்னெச்செரிக்கை இல்லாமல் வருபவை. பூமியின் ஒரு சிறு அசைவு பல லட்சம் பேர்களை பலி கொள்கிறது.
சுனாமிப் பேரலைகளோ கடற்கரைப்பகுதிகளை கபளீகரம் செய்து விடக்கூடியவை.

ஜப்பான் இயற்கையாக பூகம்ப பகுதியில் இருப்பதால் அதற்கான தகுந்த முன்னேற்பாட்டுடன் இருக்கும் நாடு. வீடுகள் கட்டிடங்கள் பாலங்கள் பூகம்பத்தை தாங்குவதற்கேற்ப கட்டப்பட்டுள்ளன. ஜப்பானில் சுனாமி முன்னெச்சரிக்கை கருவிகள் தேவையான அளவில் பொருத்தப் பட்டுள்ளன.

(சுனாமி அலாரம்களை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சப்ளை செய்வதில் முன்னணியில் இருக்கும் நாடு ஜப்பான்.)

சகல பாதுகாப்பு வசதிகளையும் முன்னெச்சரிக்கை கருவிகளையும் கொண்ட ஜப்பானை மார்ச் 11 ம் தேதி தாக்கிய பூகம்பமும் சுனாமியும் மனித சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

தொலைக்காட்சிகள் காட்டிய ஓரிரு காட்சிகளே உறைய வைக்கின்றன. அங்கிருந்து வருகிற தகவல்களே மிரளவைக்கின்றன.

உலகின் செழிப்பான முன்னேறிய ஒரு நாட்டின் மக்கள் இப்போது பரிதாபத்திற்குரியவர்களாக இயற்க்கைகு எதிராக போராடச் சக்தியவற்றவர்ளாக நிலை குலைந்து நிற்கிறார்கள். அவர்களைப் பிடித்திருக்கிற அச்சம் இன்னும் முற்றிலுமாக அகலவில்லை.

முதன்மைப் பாடம்:

இந்த உலகை மனிதன் ஆதிக்கம் செலுத்தினாலும் அது முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது முதன்மையாக புலப்படுத்துகிறது. அல்லாஹ்வின் சக்திக்கு முன்னாள் மனிதனின் பலவீனம் உணரப்பட வேண்டும்

ومن عجيب قدرة الله الباهرة أنه يجعل الشيء الواحد هو نفسه سببًا للرحمة وسببًا للنقمة، فبالماء أغرق فرعون، وبالماء أنجى موسى -عليه السلام- وبالرياح أنبت الزرع، وبالريح دمر عادًا.

நமது முதல் கடமை
பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பது. ஆறுதல் தருவது. உதவி செய்வது

يقول الدكتور حامد أبو طالب الأستاذ بجامعة الأزهر : أن الإسلام دين الرحمة والمودة والتكافل يحث علي مساعدة الضعفاء والمحتاجين
(ஹதீஸ்)
நாயிக்கு தண்ணிர் கொடுக்கதவருக்கு சொர்ர்கம் ,
பாதையில் விழுந்து கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்தியவருக்கு அல்லாஹ் நன்றி சொல்கிறான்

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ البخاري 174
 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ البخاري 4749  

இந்த இக்கட்டான நேரத்தில் இதை பாவங்கள் பெருகி விட்ட்தன் விளைவு என்றும்  இறைவனின் தண்டனை என்று சொல்வது சரியல்ல  

2009 ல் முஸ்லிம் நாடுகளில் 7 பெரிய நில நடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக 7.6 அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற இயற்கை அழிவுகள் சில வேளைகளில் அல்லாஹ்வின் தண்டனையாகவும்  சில வேளைகளில் சோதனையாகவும் சில வேளைகளில் இரண்டுமாக இருக்கலாம் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.

அல்லாஹ்வின் நடவடிக்கைக்கு முழு காரணத்தையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது.

يقول الدكتور أحمد كريمة الأستاذ بجامعة الأزهر: من المقرر شرعا أن الابتلاءات التي تحدث في كوكب الأرض من جدب وغلاء وزلازل وبراكين وسيول وغيرها ليست انتقاما من الله عز وجل بعباده ولكن هي سنن كونية من آيات الله عز وجل وتجعل الناس يلجأون لله عز وجل ويتضرعون إليه بالدعاء والاستغفار لكشف الضر الذي أصابهم, كما أن هذه الابتلاءات لم يخل عصر ما أو مكان ما منها, ففي عهد الرسل والأنبياء حدثت بعض الكوارث, وفي عصر صدر الإسلام حدث زلزال هز جبل أحد, وتكرر كثيرا قله المطر, وفي الشام حدث وباء الطاعون وكانت تحدث شبه مجاعات وكان الرسول صلي الله عليه وسلم يطلب من أصحابه الدعاء والتضرع إلي الله والاستغفار وهذه الابتلاءات ينطبق عليها قول الله تعالي

சுனாமியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக நமக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சி முஸ்லிம்களில் சிலர் ஜப்பானை விமர்ச்சித்து SMS அனுப்பியது. அதை அல்லாஹ்வுடை தண்டனை என்றும் அதனால் தான் வெள்ளிக்கிழமை அது நிகழ்ந்த்து என்றும் செய்தி அனுப்பியது. அதிலிருந்த செய்திகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஜப்பானில் வசிக்கும் தன் சகோதரன் ஜப்பானைப் பற்றி இப்படி தவறாக எதையும் சொல்லவில்லை என்று ஒரு தொழுகையாளி நேற்று என்னிடம் சொன்னார்.

இதே போல இன்னொரு sms ம் தவறானது. அணுக்கதிர்வீச்சு காற்றில் இங்கும் பரவுவதால் மழை பெய்தால் அதில் நனைய வேண்டாம் வீட்டிற்குள் ஒடிவிடுங்கள் என்று பிபிசி சொன்னதாக வந்த தகவலும் பொய். இதை பிபிசி மறுத்துள்ளது.

தயவு கூர்ந்து sms தேவையில்லாமல்  பயன்படுத்தாதீர்கள். அது முட்டாள்கள் வீணாய் போனவர்களின் வேலை.

முஸ்லிம்களின் உத்வும்கரமும், ஆறுதலும், உறுதுணையும் பொருள்முதல் வாதம் கொண்டவர்களை அல்லாஹ்வை நோக்கி திருப்புமென்றால் அதைவிட பெரிய நன்மை வேறு என்ன இருக்கிறது ? என்ற ரீதியில் முஸ்லிகள் யோசிக்க வேண்டுமே தவிர இது போல யோசிக்க கூடாது.

நிமிட நேரத்தில் தங்களது வளமான வாழ்வை, உறவுகளை, சொத்து சுகங்களை இழந்து வாடுபவர்களை எண்ணிப் பார்ப்போம்.

அவர்களுக்கு அல்லாஹ் தகுந்த ஆறுதலை தந்தருளட்டும். மீண்டும் அதிக பாதிப்புக்குள்ளாவதிலிருந்து அவர்களையும் உலக மக்களை அல்லாஹ் பாதுகாக்கட்டும் என்று பிராத்திப்போம்.

இரண்டாவது கடமை : இரண்டு எச்சரிக்கைகளை உணரவேண்டும்

·         الدكتور محمد الدسوقي أستاذ الشريعة بجامعة القاهرة يقول: المنهج الإسلامي في التعامل مع الكوارث الطبيعية يقوم علي تجنب وقوع تلك الكوارث وطرق التعامل معها, ومن المعروف أن حدوث الكوارث الطبيعية يصاحبه انتشار بعض الأمراض, وحتي نتجنب مخاطر الأمراض لابد من إعمال العقل وأخذ رأي المتخصصين

முதல் எச்சரிக்கை : அணுவின் தீமை
இன்றைய இந்தியா அணுசக்தி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுவருகிறது. குறிப்பாக மின்சார உற்பத்திக்காக
குறுகிய நேரத்தில் குறைந்த செலவுல் அதிகப் பலன் என்பதே அணுவிசையை தேடுவதன் நோக்கம்  

அணுசக்தி எப்படி இருந்தாலும் ஆபத்தானது என்பதை ஜப்பானிய நிலவரம் உணர்த்துகிறது.

ஜப்பான் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பாதிக்கப் பட்ட நாடு. அதனால் அணுஆயுத்த்திற்கு எதிராக கடுமையாக போராடிவரும் நாடு
வாஜ்பாய் காலத்தில் இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை செய்த போது இந்தியா மீது முதலாவதாக பொருளாதார தடை விதித்த நாடு ஜப்பான்.

அதே ஜப்பான் அழிவுக்காக அல்லாமல் ஆக்க சக்திக்காகமின்சாரத்திற்காகஅணுவைப் பயன்படுத்தி வந்தது.

உலகின் பலநாடுகளும் இதே த்த்துவத்தைப் பேசித்தான அணுசக்தியை பயன்படுத்தி வருகின்றன,

ஆனால் அணு, ஆயுதமாக மட்டுமல்ல எந்த வகையிலும் ஆபத்தானது தான் என்பதை இப்போதைய ஜப்பான் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இந்தப் பாடத்தை, எச்சரிக்கையை எல்லோரும் தகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனி அந்த வகையில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதுஜெர்மனி அதிபர் ஏன்ஞலா மார்க்கல் தமது நாட்டில் அமைக்கப்படவிருந்த அணுசக்தி நிலையங்கள் அமைக்கப் பட மாட்டாது என்றும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போது ஜப்பனில் ஏற்பட்ட்து போல வெடிப்பு ஐரொப்பாவில் ஏற்பட்டிருந்தால் முழு ஐரோப்பாவும் அழிந்து போயிருக்கும்.  

ஏராளமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அணுவிபத்துக்கள் எத்தகைய பாதிப்பை ஏர்படுத்தக் கூடும் என்பதை அரசு யோசிக்க வேண்டும்

இயற்கை சக்திகளை விரைவாக பயன்படுத்தி அதிக லாபம் தேடும் மனிதனின் பேராசையே பூமியின் பிரச்சினைகளுக்கு காரணம்.
 ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

இரண்டாவது எச்சரிக்கை விபத்துக்கள் எந்த நேரத்திலும் யாருக்கும் நேரலாம் எதுவும் ஆகலாம்
நம்மை விட பல்சாலிகளே இப்படி நிலைகுலைந்து விட்டார்களே நமக்கு ஏற்பட்டால் என்னாவது என்று அனைவரும் யோசிக்க வேண்டும்
عن جبير بن نفير، قال: لما افتتح المسلمون قبرص وفرق بين أهلها، قعد بعضهم يبكي إلى بعض، وبكى أبو الدرداء، فقلت: ما يبكيك في يوم أعز الله فيه الإسلام وأذل الشرك وأهله؟! قال: دعنا منك يا جبير، ما أهون الخلق على الله -عز وجل- إذا تركوا أمره، بينا هم أمة قاهرة قادرة إذ تركوا أمر الله -عز وجل- فصاروا إلى ما ترى.
முஃமின்களுக்கு இன்னும் சில பாடங்கள் :

பேரழிவுக்காட்சிகளை பார்க்கிற போது

عن عائشة قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الرِّيحِ وَالْغَيْمِ عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرَّ بِهِ وَذَهَبَ عَنْهُ ذَلِكَ قَالَتْ عَائِشَةُ فَسَأَلْتُهُ فَقَالَ إِنِّي خَشِيتُ أَنْ يَكُونَ عَذَابًا سُلِّطَ عَلَى أُمَّتِي وَيَقُولُ إِذَا رَأَى الْمَطَرَ رَحْمَةٌ  أخرجه البخاري ، ومسلم

கியாமத்தின் நினைவு
حديث أَبِي هُرَيْرَةَ- رضي الله عنه - قَالَ:قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ .
وقد ذكر -صلى الله عليه وسلم- أن الزلازل تكثر بين يدي الساعة؛
قال -صلى الله عليه وسلم-: "لا تقوم الساعة حتى... تكثر الزلازل".
அல்லாஹ்வைப் பற்றிய பயம்
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
(كَذَلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ ) [القلم: 33] (وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى) [طه: 127].

ஜ்ப்பானிய மாக்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குவானாக! பாதிப்புக்களிலிருந்து அவர்களையும் முழு உலகத்தையும் பாதுகாப்பானாக!
இது போன்ற விபத்துக்களிலிருந்து நமது நாட்டையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
அல்லாஹ்வை உணர்ந்து வாழும் தவ்பீக்கை நம்க்கும் உலக மக்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக!

கருத்துகள் இல்லை: