செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் நிகரற்ற அன்புடையோன்!

பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும் இலாபகரமாக அமைய வேண்டும் சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும் ஆனந்தமாக அமைய வேண்டும் இலக்குகளை அடைய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் நோக்கங்கள் இந்த ஐதீகத்தின் பின்னால் இருக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகளைச் சார்ந்த சடங்குகள் மதங்களையும் மொழிகளையும் நாடுகளையும் தாண்டி ஒருமைப்பட்டுக் கிடக்கின்றன. வார்த்தைகளும் அடையாளங்களும் வேண்டுமானால் வேறுபடலாம்.


பிள்ளையார் சுழி (உ) சிலுவை சங்கு சக்கரம் லிங்கம் 786 பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன.
இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப்படுத்துபவர்கள் யாவர் எம்மொழியினர் எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.

இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர்.

அதாவது சங்கம் இயக்கம் கட்சி நிறுவனம் அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக் காரணம் 'துவக்கம்' என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான்.

'முதல்கோணல் முற்றிலும் கோணல்' ' 'THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" போன்ற பழமொழிகளும் இiதயே பிரதிபலிக்கின்றன.இந்த வழக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.

எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் இடம் பெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதலாகும்.

திருமறை குர்ஆனுடைய துவக்கமே இதன் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதே இதற்குப் போதுமான சான்றாகும். அதாவது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து 'இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ' என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! (பார்க்க அல்குர்ஆன்: 96:1)


இந்தச் சமுதாயத்தின் பிரச்சினைளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும் முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.

அது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே 'இறைவனின் பெயரால்' என்று அமைந்திருக்கிறது.

அதைவிட மிக முக்கியமாக 'ஓதுவீராக!' என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.

எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் - இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது.

அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.படிப்பதற்கு முன்:மேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது

அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.
எழுதுவதற்கு முன்:ஸபா நாட்டு அரசிக்கு சுலைமான் (அலை) அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30)

நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ - முஸ்லிமில் உள்ளது.

உயிர்ப்பிராணிகளை அறுக்கும்போது:நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்! (6:118)

நபி (ஸல்) அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)

உழூ செய்வதற்கு முன்:'பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.

உண்பதற்கு முன்:பிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா (ரழி) அறிவிக்கும் தகவல் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.

உண்ணும்போது பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதீ அபூ தாவூதில் உள்ளது.

உறங்குவதற்கு முன்:நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே! உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)

வாகனத்தில் ஏறும்போது:நபி (ஸல்) வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில் காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ (ரழி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத் திர்மிதீ, அபூ தாவூத்)

ஓதிப்பார்க்கும்போது:ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் சிரமப்படுகிறீர்களா?' பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)... என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) நூல்: முஸ்லிம்.

யாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி... என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.

தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார் 'உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் ... கூறுவீராக!' எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.

உடலுறவுக்குமுன்:உங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)

வீட்டிலிருந்து புறப்படும்போது:ஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத் திர்மிதீ)

வீட்டில் நுழையும்போது:ஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரழி) நூல்: அபூ தாவூத்.

இப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இனி பிஸ்மில்லாஹ்வின் - இறை நாமத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)

நீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்!

ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க! தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!... பாத்திரங்களை மூடி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!

உங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு மூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் (ரழி) மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.ஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா?

உண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரழி) நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும்.
இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.

குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் (ரழி) மூலம் நஸயீயில் உள்ளது.

இந்த அற்புதம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

கைமேல் பலன் கிடைக்கும் இந்த நன்மையைப் பற்றி நமது தாய்மார்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் தொழுகையில்கூட அக்கறையில்லாத பலபெண்கள் உலையில் அரிசியை இடும்போது பிஸ்மில்லாஹ் கூறத் தவறுவதில்லை.

முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் பிஸ்மில்லாஹ்விற்குப்பகரமாக இலாஹி 786 போன்றவற்றை எழுதுகின்றனர். இலாஹி என்று எழுதுவதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைக் காண முடியவில்லை.

786 என்பது 'அப்ஜத்' அரபி எண்ணியல் கணக்குப் (NUMEROLOGY) பிரகாரம் பிஸ்மில்லாஹ்..வின் கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர்.

இரு காரணங்களால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.
முதலாவது காரணம் நபி (ஸல்) அவர்களில் அங்கீகாரம் இதற்கு இல்லை.

அதற்கு மாறாக அன்னார் பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதியிருக்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களும் வேற்று நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ்வைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி மேலே கண்டோம்.

எனவே 786 போன்ற வாசகங்களை எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றிவிட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

மற்றொரு காரணம், 786 என்ற கூட்டுத் தொகை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் சொந்தமானதல்ல மாறாக ஹரே கிருஷ்ணா போன்ற இஸ்லாத்திற்கே சம்பந்தமில்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும்.

ஏன் ஷைத்தான் மற்றும் ஃபிர்அவ்னின் மூலம் ஏற்படும் உதவி(யால்) என்ற கருத்துள்ள அவ்னன் பி ஃபிர்அவ்ன வ பி ஷைத்தான என்ற வாசகத்தின் எண்ணியல் கூட்டுத்தொகையும் 786 வரும்.

எண்ணியல் ( NUMEROLOGY ) வழக்கத்தை அங்கீகரிக்கத் துவங்கினால் பல தீய விளைவுகள் ஏற்படும். இப்போதே கூட வாகனம் வீடு உரிமங்கள் போன்றவற்றின் பதிவு மற்றும் அடையாள எண்களில் 786 வருவதை நல்ல சகுனமாகவும் இப்லீஸ் என்ற வார்த்தையின் கூட்டுத் தொகையான 103-ஐ அபசகுனமாகவும் பலர் கருதுகின்றனர்.

இன்னொரு இரகசியம் என்ன தெரியுமா? இப்படிப்பட்டவர்களில் பலர் பிஸ்மி என்று மட்டும் தங்கள் நிறுவனங்களுக்கோ உற்பத்திப் பொருட்களுக்கோ பெயர் வைத்துக் கொண்டு ஆனந்தமடைகின்றனர். பிஸ்மி என்பதன் கூட்டுத் தொகையும் 103 தான்.

அரசு, மற்றும் தனியார் நிறுவன பதிவுகளிலும் 786 என்கிற எண் கிடைப்பதற்காக காசு கொடுப்பதற்கு மக்கள் தயாராவதைப் போல எதேச்சையாக 103 கிடைத்து விட்டால் அதை மாற்றுவதற்குப் பணம் செலவழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

அது மட்டுமல்லாமல் விவரமறியாத பலரும் இந்த எண்ணை ஆபர அணிகலன்களில் பொறித்து மகிழ்வதும் அதற்கு மரியாதை செய்யும் வகையில் அதை முத்திக்கொள்வதும் அதைச் சட்டங்களில் அடக்கி சுவர்களில் மாட்டி அதற்குப் பக்தி முத்திரை குத்தி அதற்கு ஊதுபத்தி ஏற்றுவதும் பூச்சரங்கள் சாற்றுவதும் இன்றைய இஸ்லாமியக் கலாச்சாரமாய் அறிமுகமாகி வருகின்றன.

கலை நிகழ்ச்சிகளிலும் மாற்று மதச் சின்னங்களாக சிலுவை மற்றும் சிலைகளுக்கு நிகராக இந்த 786 தான் இஸ்லாத்தின் சார்பாக இடம் பெறுகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளுக்கு மாற்றமான ஷிர்க் பித்அத் பிற சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாதல் போன்ற தீமைகளை உள்ளடக்கிய இந்த எண்ணியல் வழக்கம் தேவைதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டால் அதன் மகத்துவம் தெரியாத சிலர் அதைக் கிழித்தோ அல்லது அசிங்கப்படுத்தியோ அதன் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்துகொள்ளக்கூடும். அதைத் தவிர்க்கவே 786-ஐ நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்று சிலர் காரணம் கூறுகின்றனர்.

மாற்றுமத அரசர்களுக்குக் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹ்வை எழுதிய நபி (ஸல்) அவர்களுக்கே ஏற்படாத அக்கறையா பிஸ்மில்லாஹ்வின் புனிதத்தைக் காப்பாற்று வதில் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது?

இன்னும் சொல்லப்போனால் தாம் எழுதியனுப்பிய கடிதத்தைக் கிழித்துப்போட்டு கொச்சைப் படுத்திய பாரசீகநாட்டு மன்னரைச் சபித்த நபி (ஸல்) (பார்க்க: இப்னு அப்பாஸ் (ரழி) புகாரீயில்) இனி பிஸ்மில்லாஹ் எழுதக்கூடாது என்றோ அதற்கு மாற்றாக எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்றோ கூறியதில்லை.

இதைப்போலவே கடிதத்தின் ஆரம்பத்தில் இலாஹீ என்று எழுதுவதும் முறையல்ல. ஏனெனில் அவ்வாறு எழுதுவதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை.

எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை - மறுமையின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை

எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!

எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!

எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்; அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர் நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்ற போது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டு வருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்ற போது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது. 1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா? என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

இமாமுல் அஃலம் ஸெய்யதுனா அபூ ஹனீfபா ரலியல்லாஹு அன்ஹு

இமாமுல் அஃலம் ஸெய்யதுனா அபூ ஹனீfபா ரலியல்லாஹு அன்ஹு

இவர்களது இயற்பெயர் நுஃமான் என்பதாகும். அபூஹனீபா என்பது இவர்களது புனைப் பெயர். இவர்களின் தந்தையின் பெயர் தாபித். ‘இமாமுல் அஃலம்’ (கௌரவமிக்க தலைவர்) எனவோர் சிறப்புப் பெயர் இவர்களுக்கு வழங்குவதுமுண்டு. இவர்கள் இராக் தேசத்திலுள்ள கூபாவில் ஹிஜ்ரி 80- ல் (கி. பி 699) அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியின்போது பிறந்தார்கள். ஹனபி மத்ஹபின் ஸ்தாபகரே இவர்கள்.

இவர்கள் நடுத்தர உயரமும், சிவப்புக் கலந்த வெண்மை நிறமும், அழகிய தோற்றமுடையவர்கள். இவர்களின் தவத்தையும், பூரண இறைபக்தியையும் பாராட்டாதோரிலர். இவர்கள் இராக் காலங்களில் முற்றிலும் தூங்காது அல்லாஹ்வை வணங்குவார்கள். தர்மம் செய்வதில் தலைசிறந்து விளங்கினார்கள். குடும்பச் செலவு போகத் தங்கள் பொருளில் எஞ்சியதைச் சேகரித்து ஏழைகள் முதலானோருக்குத் தினமும் அளித்து வந்தார்கள். இவர்கள் ஓரிடத்தில் மாத்திரம் 7000 விடுத்தம் குர்ஆன் ஓதிப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு கியாஸ் என்னும் ஒப்புமை ஆதார விதியால் சட்டங்கள் இயற்றுவதில் விசேஷ ஆற்றல் இருந்தது. அதேபோல் நாஸ்திகருடன் இவர்கள் விவாதித்து அன்னவர்களைத் தோல்வியுறச் செய்தார்கள்.

ஹம்மாத் பின் அபூஸுலைமான், முஹம்மத் பின் முன்கதிர், அதாஃபின் அபூரபாஹ் முதலிய சட்ட நிபுணரில் நின்றும் கல்வி பெற்றார்கள். ஆயிரக் கணக்கான மாணவர்கள் இவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்களின் சீடர்களுள் அக்கால அப்பாஸிய்யா அரசாங்கத்தில் நீதிபதிகளாயிருந்த (காஸி) அபூயூஸுப் (ரலியல்லாஹு அன்ஹு), முஹம்மத் ஷைபானி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் இவர்களின் கல்வியை உலகினருக்கு அளித்துதவினர்.

இவர்களின் ஹனபி மத்ஹபுக்குப் பின்னரே ஏனைய பிரதான மூன்று மத்ஹபுகளும் தோன்றின. உலகில் பெரும் பகுதியான முஸ்லிம்கள் இவர்களின் மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் பன்முறை பரிசுத்த மக்கா, மதீனா சென்றுள்ளார்கள். இமாம் மாலிகையும் சந்தித்துள்ளார்கள்.

“எம் சமூகத்தினரின் மத்தியில் ஓர் அறிஞர் தோன்றி அவர்களைக் காப்பாற்றி ஞானம் போதிக்கும் அறிவின் சுடராய் அவர் முன்வருவார்” என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது இவர்களைப்பற்றியென அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். “

நான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) யின் ஆசீர்வாதம் பெற்றுள்ளேன்” என இவர்கள் கூறுபவர்களாயிருந்தார்கள். ஏனெனில் இவர்களின் தந்தை தாபித் (ரலியல்லாஹு அன்ஹு), அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒருமுறை சென்றபோது அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அன்னாருக்காகவும் அன்னாரின் சந்ததிகளுக்காகவும் அல்லாஹ்வை இறைஞ்சி ஆசீர்வதித்தார்கள்.

இமாம் ஷாபியீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவர்களைப் பற்றிப் புகழும்பொழுது “இவ்வகில மக்களின் புத்தியும் விவேகமும் இமாமின் புத்தி விவேகத்திற்குச் சமமாகா” என்று வாழ்த்தினார்கள். இமாம் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இவர்களின் விவேகம், ஒன்றை நிரூபிக்கும் ஆற்றல் ஆகியவற்றை மிகவும் பாராட்டினார்கள்.

பட்டம், உத்தியோகப் பதவிகளினால் பெருமையடைதல் ஆகியவற்றை இவர்கள் விரும்பவில்லை. ஒருமுறை ஸிரியா நாட்டதிபதி அத்தேச பொக்கிஷப் பாதுகாவலராக இவர்களை நியமித்தார். அவர்கள் அதை மறுக்க அவ்வதிபதியின் உத்தரவுப் பிரகாரம் அவர்கள் தலைகுனிய வைக்கப்பட்டு முதுகில் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். பனூ உமையாக்களின் கடைசி அரசரான மர்வானின் காலத்தில் இப்னு ஹுஸரா வேணும் அதிகாரி இமாமைக் கூபாவின் நீதிபதியாகவும் ‘பைதுல் மாலின்’ (அரசாங்க பொக்கிஷம்) பொறுப்பாளியாகவுமிருக்குமாறு கட்டளையிட அவர்கள் அதையேற்காதிருந்தபோது அவர்களுக்கு 100 கசையடிகள் கொடுக்குமாறு அவ்வதிகாரி கட்டளையிட்டான். அங்ஙனமே நாளொன்றுக்குப் பத்துக் கசையடியாகப் பத்து நாட்களுள் அது நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் இவர்கள் சிறிதுகாலம் மக்காவில் தங்கிப் பின்னர் அப்பாஸிய்யா அரசருள் மன்சூர் அரசு புரியும்போது பஃதாத் திரும்பினார்கள். இவ்வரசனும் அவர்களைச் சும்மாவிடவில்லை. இராக் தேச நீதிபதியாயிருக்க உத்தரவிடப்பட்டார்கள். அரசனுக்கும் அவர்களுக்குமிடையே நீண்ட வாக்குவாதம் நடைபெற்றது. முடிவில் கசையடியும் சிறையும் பெற்றார்கள். சிறையிலும் 12 தினங்களாய்த் தாக்கப்பட்டார்கள். அவர்களின் கால்கள் வழியாக இரத்தம் வழிந்தோடியது. கடைசியாக விஷம் கலந்த ஒரு பானத்தை அருந்தக் கொடுத்து அவர்களைக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. மிகவும் பொறுமையுடன் அவர்கள் அல்லாஹ்வுக்காகச் சிரங்குனிந்து ஸுஜூதில் வீழ்ந்திருக்கும்போது அவர்கள் ஆவி பிரிந்தது. அவர்கள் ஹிஜ்ரி 150 – ம் வருஷம் ரஜபு மாதம் (கி. பி. 772) தங்களின் 70 – ம் வயதில் பஃதாதில் காலமானார்கள்.

இவர்களின் காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களில் பஸராவில் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), கூபாவில் அப்துல்லாஹ் பின் ஒளபா (ரலியல்லாஹு அன்ஹு), மதீனாவில் ஸஹ்ல் பின் ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு), மதீனாவில் அபுத்துபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலியல்லாஹு அன்ஹு) வும் இருந்தார்கள்.

அல்லாஹ்  அவர்களை பொருந்திக்கொள்வானாக.

குத்புல் அக்தாப், கௌசுல் அஃலம் ஸெய்யதுனா முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு

குத்புல் அக்தாப், கௌசுல் அஃலம் ஸெய்யதுனா முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு

       மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். "காதிரியா தரீகா" என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது.

ஜனனம்
எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.

ஜனனத்தின் மகத்துவம்
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள்.

கல்வி
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள்.

ஷைக்கின் சகவாசம்
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் 'தஸவ்வுஃப்' என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், " இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்" என்று கூறினார்கள்.

துறவு நிலை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள்.

காதிரியா தரீக்காவின் உருவாக்கம்
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, "அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்" எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், "யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்" என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு "ராத்திப்" என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள்.

முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: " நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்." என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார்.

அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : " எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது" என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள்.

குடும்ப வாழ்க்கை
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள்.

மறைவு
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் " சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக" என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள்.

அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஜகாத்

ஜகாத்


624 நபி(ஸல்) அவர்கள் தம்மை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது ”ஒவ்வொரு முப்பது மாடுகளுக்கும் ஜகாத்தாக ஒரு வருடக் காளை அல்லது பசு வாங்க வேண்டும். வயது வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தீனார் ஜகாத்தாக வாங்க வேண்டும் அல்லது அதன் விலை மதிப்புள்ள துணி வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் தமக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா



இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மவ்ஸூல் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







625 ”முஸ்லிம்களிடமிருந்து அவர்களுடைய தண்ணீருக்கும் ஜகாத் வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தையிடமிருந்தும் அவர் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத்



”அவர்களுடைய ஜகாத்தை அவர்களுடைய வீடுகளிலிருந்து பெற வேண்டும்” என்று அபூதாவூதில் உள்ளது.







626 ”எந்த ஒரு முஸ்லிம் மீதும் அவன் (சவாரிக்காக) வைத்திருக்கும் குதிரை மற்றும் அவனுடைய அடிமைக்காக ஜகாத் செலுத்துவது கடமையல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி



”அடிமையின் மீது ஸதக்கத்துல் ஃபித்ரைத் தவிர்த்து எந்த ஜகாத்தும் கடமை இல்லை” என்றும் முஸ்லிமில் பதிவாகியள்ளது.







627 ”காடுகளில் மேய்ந்து கொள்ளும் ஒட்டகங்களில் ஒவ்வொரு நாற்பதிற்கும் இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் ஐகாத் ஆகும். இதைக் கணக்கிட்டு (ஜகாத் கொடுக்காதிருக்க) அவர்கள் அவற்றைப் பிரித்துக் கொள்ளக் கூடாது. எவர் ஜகாத்தை இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்து கொடுக்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். எவர் ஜகாத் கொடுக்கவில்லையோ, அவரிடமிருந்து நாம் அதைக் கண்டிப்பாக வாங்குவோம். அவருடைய சொத்தின் ஒரு பகுதி நம் இறைவனால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். அதில் இருந்து எதுவுமே முஹம்மதின் குடும்பத்தாருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, பஹஜ் இப்னு ஹகீம் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ



நஸாயீ மற்றும் ஹாகிம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும், ஷாஃபிஈயில் முஅல்லக் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.







628 ”உன்னிடம் இருநூறு திர்ஹம் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அவற்றிலிருந்து ஐந்து திர்ஹம் ஜகாத்(கடமை) ஆகும். உன்னிடம் இருபது தீனார்கள் வரும் வரை நீ ஜகாத் கொடுக்க வேண்டியது இல்லை. இருபது தீனார்கள் மட்டும் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அரை தீனார் அவற்றிலிருந்து ஜகாத் ஆகும். அதற்கு மேல் எவ்வளவு அதிகமானலும் அதைக் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது கடமையாகும். வருடம் ஒன்று கழியாத எந்த ஒரு சொத்தின் மீதும் ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்



இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மர்ஃபூ எனும் தரத்தைப் பெற்றுள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.







629 ”ஒருவர் ஒரு சொத்தைப் பெற்ற பின்பு அதன் மீது வருடம் ஒன்று கழியாமல் ஜகாத் இல்லை” என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.



இது மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.







630 ”வேலை வாங்கப்படும் காளை மாடுகளில் மீது ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அலீ(ரலி) அறிவிக்கிறார். அப+தாசீத், தாரகுத்னீ



இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







631 ”அநாதையுடைய சொத்துக்கு எவர் பொறுப்பேற்றுள்ளாரோ அவர் அதை வியாபாரம் (தொழில்) செய்து பெருக்கிக் கொள்ளட்டும். ஜகாத் அதை விழுங்கும் அளவிற்கு விட்டுவிட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். திர்மிதீ, தாரகுத்னி







632 மக்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்கும் போது ”யா அல்லாஹ்! இவர்களுக்கு கருணை செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள் என, அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்







633 அப்பாஸ்(ரலி) அவர்கள் தம்முடைய ஜகாத்தை அதன் நேரம் வரும் முன்பே செலுத்துவது சம்பந்தமாக கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதி வழங்கினார்கள் என்று அலி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, ஹாகீம்







634 ”இருநூறு திர்ஹத்திற்கும் குறைவாக வெள்ளி இருப்பின் அதன் மீது ஜகாத் இல்லை. ஒட்டகங்கள் ஐந்திற்கும் குறைவாக இருப்பின், அவற்றின் மீதும் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்கிற்குக் குறைவாக உள்ள பேரிச்சம் பழத்தின் மீதும் ஜகாத் இல்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்







635 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ”ஐந்து வஸக் அளவிற்கும் குறைவாக உள்ள பேரிச்சம்பழம் மற்றும் தானியங்களுக்கு ஜகாத் இல்லை” என்று அபூசயீத்(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரி முஸ்லிம் உள்ளது.







636 ”மழைத்தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றால் பாசனம் செய்யப்படும் நிலம் அல்லது ஈரத் தன்மையுள்ள நிலத்தின் மூலம் செய்யப்படும் வேளாண்மையில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் கடமையாகும். தண்ணீர் இறைத்துப் பாசனம் செய்யப்படும் நிலத்திலிருந்து வரும் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கு ஜகாத் (கடமை) ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் தம் தந்தை இப்னு உமர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். புகாரி



தானாக விளையும் வேளாண்மைக்குப் பத்தில் ஒரு பங்கும், சால்(பை) அல்லது கால்நடைகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும் நிலத்தின் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கடமை என்று அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.







637 ”தானியங்களில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை, பேரிச்சை ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எந்த வேளாண்மைக்கும் ஜகாத் வாங்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா அல் அஸ்அரி(ரலி) மற்றும் முஆத்(ரலி) அறிவிக்கின்றனர். தப்ரானி, ஹாம்கி







638 வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், மாதுளை மற்றும் ‘கஸப்’ எனும் ஒரு வகைப் புல் ஆகியவற்றிற்கு (ஜகாத் இல்லை) என நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்ததாக முஆத்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







639 ”நீங்கள் (ஜகாத்தை) மதீப்பிடு செய்ய (வசூலிக்கச்) சென்றால், மூன்றில் ஒரு பகுதியை விட்டு, விட்டு (மற்றவற்றில் ஜகாத்தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒரு பங்கை விடாவிட்டால் நான்கில் ஒரு பங்கை(யாவது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அப+ தாசீத், நஸாயீ மற்றும் திர்மிதீ



இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







640 பேரிச்சம் பழத்தில் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அதற்குரிய ஜகாத் காய்ந்த திராட்சை (ம்ஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாசீத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.



இது முன்கதிஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







641 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ”நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இல்லை” என்றார். ”மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ



இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







642 தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ”இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?” என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ”அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







643 நாங்கள் வியாபாரத்திற்காகத் தயாரிக்கும் பொருட்களிலிருந்து ஜகாத்தை எடுத்துச் கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என, ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







644 ”புதையலில் (மற்றும் சுரங்கப் பொருட்களில்) ஐந்தில் ஒரு பகுதி ஜகாத் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்







645 பாழடைந்த ஓர் இடத்திலிருந்து ஒருவருக்குக் கிடைத்த புதையலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில், ”அதை நீ மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பெற்றிருந்தால் (யாருடையது எனக் கேட்டு) அதை அறிவிப்புச் செய்! மக்கள் வசிக்காத பகுதியிலிருந்து அதைப் பெற்றிருந்தால் அதன் ஐந்திலொரு பங்கு ஜகாத் ஆகும்” என்று கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.







646 ‘கபலிய்யா’ எனும் சுரங்கத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வாங்கினார்கள் என பிலால் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்





குளிப்பு கடமையானவர்களாக

நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6)




குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:



விந்து வெளிப்படல்:

“இச்சை நீர்வெளிப்பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)



இச்சை நீருக்கும் விந்துக்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொருளாகும். இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடினமில்லாத சாதாரண திரவப் பொருளாகும். இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின்போது வெளியாகும்.



அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்படமாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)



உடலுறவு கொள்ளல்:

உடலுறவு கொள்ளும்போது விந்து வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது. பின்பு இச்சட்டம் மாற்றப்பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்தால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பு அவசியமாக்கப்பட்டு) விட்டது. (ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)



ஒருவர் தனது மனைவியின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, பின்பு (உறவுகொள்ள) முயற்சித்தால் குளிப்பு கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)



மாதவிடாய் ஏற்படல்:

நபியே! மாதவிடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும் அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை (உடலுறவு கொள்ள) நெருங்காதீர்கள். மாதவிடாயிலிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)



“மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)



மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளை திருப்பி (களா) தொழ வேண்டியதில்லை. (புகாரி-310) ஆனால் விடுபட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.



தொடர் உதிரப்போக்கு:

மாதவிடாய் குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின், தொடர்ந்தும் இரத்தம் வெளியேறுவதைத் தான் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படும். இத்தொடர் உதிரப்போக்குள்ளவர்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்களைக் கணக்கிட்டு விட்டு குளித்து சுத்தமாகித் தொழ வேண்டும்.



தொடர் உதிரப்போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது ”அது மாத விடாய் அல்ல. அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். (அதனால்தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியேறுகிறது) என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333)



நான் சுத்தமாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன். எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்கமாக) உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு. பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)



பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கி றேன். எனவே தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் அது மாதவிடாய் அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். உன் மாதவிடாய் நாட்களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்துக் கொள். பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தாலும் சரியே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)



பிரசவத் தீட்டு ஏற்படல்:

பிரசவத்தின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும். அந்நாட்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.



குளிக்கும் முறை:

கடமையான குளிப்பை நிறைவேற்ற முன் இரு கைகளையும் மூன்று முறை கழுவ வேண்டும். அதன் பின், மர்மஸ்தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும். அதன் பின் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப்படுத்தி)க் கொள்ள வேண்டும். குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆண், பெண் இவ்வாறு கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் குளிப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தம் இரு கைகளையும் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போன்று வுழூ செய்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)



நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி, இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தால் ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பின்பு தமது கையைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு (குளித்த இடத்திலிருந்து) சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். (அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)



நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)



அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாதவிடாய் குளிப்பின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.



அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று கூறினார்கள்.



உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன் னேன்.



மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு நபியவர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றார்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)



உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும்பினால், வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)



எங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259)



மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 5)

‘மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து வருகின்றோம். அவரது வாதமும், ஸுன்னாவை அவர் அணுகும் முறையும் தவறானது என்பதற்கு இது தக்க சான்றாக அமைகின்றது. இந்த ஹதீஸ் குறித்து அவர் முன்வைக்கும் இன்னும் சில வாதங்களுக்கான பதில்களை இங்கே நோக்குவோம்.



‘மலக்குல் மவ்த்’ தோல்வியுடன் திரும்பிச் சென்றாரா?



ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகின்றது’ என்று பீஜே தனது வாதத்தை ஆரம்பிக்கின்றார்.



அடுத்ததாக வானவர்களின் பண்புகள் குறித்தும் பேசுகின்றார்.



வானவர்களைப் பொறுத்தவரையில்;



- அவர்கள் தமக்குக் கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.



அவர்கள் தமக்கு மேலேயுள்ள தமது இரட்சகனை அஞ்சி, தமக்கு ஏவப்படுவதைச் செய்வார்கள். (16:50)



- அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.



பேச்சால் அவனை அவர்கள் முந்த மாட்டார்கள். அவனது கட்டளைக்கேற்பவே அவர்கள் செயற்படுவார்கள். (21:27)



- தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.



நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட் களாகும். அதன்மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்ய மாட்டார்கள். மேலும், அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வார்கள். (66:6)



இது போன்ற குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பின்னர் சகோதரர் பீஜே தனது வாதத்தைப் பின்வருமாறு முடிக்கின்றார்.



இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பதுதான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகின்றது. (பார்க்க: ‘பீஜே தர்ஜமா’ பதிப்பு:04, பக்கம்:1308)



அல்லாஹ் ஒரு வானவருக்குக் கட்டளை பிறப்பித்தால், ‘அந்தக் கட்டளை என்ன?’ என்பதை நானோ, நீங்களோ, பீஜே அவர்களோ அறிய முடியாது. அதை அறிய வேண்டுமானால் அல்லாஹ் இட்ட கட்டளையை அல்லாஹ் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வின் தூதர் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய செய்தி ஒன்றை வைத்து ‘இதுதான் ஏவப்பட்டுள்ளது’ என நாம் முடிவு செய்யலாம். இதை விட்டு விட்டு நாமாக ஒரு முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.



அல்லாஹ் மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வேண்டும் என மலக்குக்குக் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக அவர் உயிரைக் கைப்பற்றியிருப்பார். ஏனெனில், மலக்குகள் இட்ட பணியை ஆற்றுவர். அதற்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். இந்த ஹதீஸில் மலக்கு அடிபட்டதும் மீண்டும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்கிறார் என்றால் அந்த மலக்கு மூஸா நபியின் உயிரை உடனே கைப்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வால் ஏவப்படவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு அல்லாஹ் ஏவியதை மலக்கு செய்யவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று நாமாக முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.



இதே வேளை நபிமார்கள் அவர்களது விருப்பத்துடன்தான் மரணத்தைத் தழுவுவர் என்பதற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்குரியவர்கள் என்பது நிச்சயமாக மலக்குல் மவ்த்துக்குத் தெரிந்தே இருக்கும். எனவே மலக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மூஸா நபியிடம் தோற்றுப் போனதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது அப்பட்டமான, அபத்தமான குற்றச்சாட்டாகும்.



வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார்:



ஒரு வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார். அல்லாஹ் ஏவியதைத்தான் செய்வார். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வானவர் வருகிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படித்தான் வந்துள்ளார் என்பது மூஸா நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அற்ப உண்மையைக் கூட அறியாதவராக மூஸா நபி இருந்துள்ளார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அடிப்படையில் வாதிட்டும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இதுவும் தவறான வாதம்தான். இதே அடிப்படையில் கேள்வி கேட்பதாக இருந்தால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களிலும் சந்தேகம் எழ ஆரம்பித்து விடும்.



மர்யம்(அலை) அவர்கள் குர்ஆன் சிறப்பித்துக் கூறும் ஒரு பெண்ணாவார்கள். முஃமின்களுக்கு உதாரணமாகக் கூறப்பட்ட இரு பெண்களில் இவரும் ஒருவர். அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றவர். இவரின் பெயரில் அல்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் அழைக்கப்படுகின்றது.



மர்யம்(அலை) அவர்கள் தனிமையில் இருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித ரூபத்தில் வருகின்றார்கள். அந்நிய ஆணைக் கண்ட மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றார்கள். அப்போது அவர் தான் ஒரு மலக்கு என்றும், மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கப் போகிறது என்றும் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் அவர் நபியாக இருப்பார். அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம். அவர் தொட்டில் பருவத்தில் பேசுவார் என்று பல செய்திகளையும் கூறுகின்றார்கள். வந்தவர் வானவர் என்றால் மர்யம்(அலை) அவர்கள் இவர் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்துள்ளார். இவர் சொல்வது நிச்சயம் நடக்கும் என்று நம்பியிருக்க வேண்டும். ஆனால், மர்யம்(அலை) அவர்கள் ‘என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை. நான் கெட்ட நடத்தை உள்ளவளுமல்ல. இப்படி இருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும்?’ எனக் கேள்வி கேட்கின்றார்கள். அதற்கு ‘அது எனக்கு இலகுவானது என உமது இரட்சகன் கூறுகின்றான்’ என வானவர் பதிலளித்தார். (பார்க்க 19:17-21, 3:45-49)



மர்யம்(அலை) அவர்கள் ஒரு ஸாலிஹான பெண்; முஃமின்களுக்கு முன் உதாரணமாக அல்லாஹ் கூறிய பெண். அவர்கள் மலக்குகளின் பண்புகளை அறியாமல் இருந்தார்களா? அல்லது அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் என்பதை நம்பாததால்தான் ‘ஒரு ஆணும் என்னைத் தீண்டாமல் எனக்கு எப்படிக் குழந்தை கிடைக்க முடியும்?’ என்று கேட்டார்களா? இப்படிச் சிந்திக்க முடியுமா?



இப்படிச் சிந்தித்தால் ஒன்றில் இந்தச் சம்பவத்தை மறுக்க வேண்டும் அல்லது மர்யம்(அலை) அவர்கள் அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இரண்டுமே தவறானவை என்பதால் சம்பவத்தையும் நம்பி, மர்யம்(அலை) அவர்களது மார்க்க அறிவிலும் குறை காணாமல் இருப்பதென்றால் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸையும் ஏற்று, அது மூஸா நபியின் மார்க்க அறிவைக் குறைத்துக் காட்டாது என்றும் நம்ப முடியும்.



அன்னை சாரா அவர்களும், மலக்குகளும்:



அன்னை சாரா(அலை) அவர்கள் இப்றாஹீம் நபியின் மனைவியாவார்கள். 60:4 என்ற வசனத்தின் மூலம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். இவர்களும், மலக்குகளும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குர்ஆனில் கூறப்படுகின்றது.

(பார்க்க: 51:24-30, 15:51-60, 11:69-76, 29:31-32)



இந்தச் சம்பவத்தில் மனித ரூபத்தில் இப்றாஹீம் நபியிடம் மலக்குகள் வருகின்றனர். வந்தவர்கள் வானவர்கள் என்பதை அறியாமல் அவர் மலக்குகளுக்கு விருந்தளிக்கின்றார். அவர்கள் உண்ணாத போது ஆச்சரியப்பட்டு வினவிய போதுதான் வந்தவர்கள் வானவர்கள் என்பது அவருக்குத் தெரிகின்றது. வந்தவர்கள் தாம் இரண்டு நோக்கங்களுக்காக வந்ததாகக் கூறுகின்றனர்.



(1) இப்றாஹீம்-சாரா தம்பதியினருக்கு இஸ்ஹாக் என்ற அறிவுஞானம் மிக்க ஒரு குழந்தையைக் கொண்டு நன்மாராயம் கூறுவது. அந்தக் குழந்தைக்கு யஃகூப் என்ற ஆண் குழந்தை கிடைக்கும். அவர்கள் நபியாக இருப்பார்கள் என்ற நற்செய்தி சொல்வது.



(2) தன்னினச் சேர்க்கையாளர்களான லூத் நபியின் கூட்டத்தினரை அழிப்பது.



இந்தச் செய்திகளைக் கூறியதும் அன்னை சாரா(அலை) அவர்கள் சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக்கொண்டு ‘நான் மலட்டுக் கிழவியாயிற்றே!’ என்றார்கள். அதற்கவர்கள் ‘அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்’ என்றனர்.

(பார்க்க: அல்குர்ஆன் 51:24-30)



மலக்குகள் வந்து ஒரு செய்தியைக் கூறினால் சும்ம தாமாக வந்து கூற மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றிச் செயல்பட மாட்டார்கள். இப்படி இருக்க வானவர்கள் வந்து கூறியதும் ஒரு நபியின் மனைவி, அதுவும் அழகிய முன் உதாரணம் உண்டு என அல்லாஹ் கூறிய புகழுக்குரிய பெண் உடனே அதை நம்பி ஏற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக ‘நான் மலடி! கிழவி! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்!?’ என்ற தோரணையில் பேசுகின்றார்கள். அதற்கு வந்த வானவர்கள் ‘இப்படித்தான் உமது இரட்சகன் கூறினான்!’ எனக் கூற வேண்டி ஏற்படுகின்றது. வந்தவர்கள் இப்படிக் கூறாமலேயே அன்னை சாரா அவர்கள் அதை உணர்ந்து நடந்திருக்க வேண்டும். இந்தச் சம்பவம் அதற்கு மாற்றமாகக் கூறுகின்றது. எனவே ஒன்றில், இந்தச் சம்பவம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்னை சாரா அவர்கள் மலக்குகள் ஒரு செய்தியைச் சொன்னால் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் சொல்வார்கள். பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூற வேண்டும். பீஜே அவர்கள் ஹதீஸை அணுகும் முறையில் இந்தச் சம்பவத்தை அணுகினால் இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் எடுக்க நேரிடும். ஆனால் இந்த இரண்டுமே தவறான முடிவுகளாகும். பீஜே அவர்களின் ஹதீஸ் தொடர்பான அணுகுமுறை ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறியலாம்.



இப்றாஹீம் நபி அறியாது இருந்தாரா?



மேற்சொன்ன செய்தி ஒரு சாதாரணப் பெண் சம்பந்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை மற்றோரிடத்தில் குர்ஆன் குறிப்பிடும் போது இப்றாஹீம் நபி பேசிய விதமும் இவ்வாறே அமைந்துள்ளது.



மலக்குகள் நற்செய்தி கூறியதும், எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்களா? எதனடிப்படையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்கள்? எனக் கேட்டுள்ளார்கள்.



அ(தற்க)வர் ”எனக்கு முதுமை ஏற்பட்டிருக்கும் போது நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். (15:54)



வந்தவர்கள் மலக்குகள் என்று தெரிந்து விட்டது. அவர்கள் குழந்தை கிடைக்கும்; ஆண் குழந்தை; அறிவுள்ள குழந்தை என்றெல்லாம் கூறுகின்றார்கள். வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளை இல்லாமல் வர மாட்டார்கள். இரட்சகன் சொல்லாததைச் சொல்ல மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு ஒரு நபிக்கு இருந்திருக்க வேண்டும். எனவே மலக்குகள் கூறியதும் உடனே மறு பேச்சின்றி ஒரு நபி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்றாஹீம் நபி எனக்கு முதுமை ஏற்பட்டு விட்டது. இதன் பின்னர் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனக் கேள்வி கேட்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ் கூறியதின் அடிப்படையில்தான் நற்செய்தி கூறுவார்கள் என்ற சாதாரண அறிவு கூட இப்றாஹீம் நபிக்கு இருக்கவில்லை என இந்தச் சம்பவம் கூறுகின்றது எனக் கூறிக் குர்ஆனை நிராகரிக்க முடியுமா? பீஜே அவர்கள் ஹதீஸ்களை அணுகும் இந்தத் தவறான வழிமுறை பிற்காலத்தில் குர்ஆனை மறுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் ஆபத்துள்ளது என்பதை இது உணர்த்துகின்றதல்லவா?



வானவரிடம் வாதாட்டமா?



மலக்குகள் வந்து சொன்ன ஒரு விடயத்தில் கணவன்-மனைவி இருவரும் இப்படி நடந்து கொண்டனர். அடுத்த செய்தி லூத் நபியின் கூட்டத்தினரை வந்த மலக்குகள் அழிக்கப்போகின்றனர் என்பதாகும். இதை மலக்குகள் கூறிய பின்னர் இப்றாஹீம் நபி மலக்குகளுடன் வாதாட்டம் செய்யலானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. அப்போது வானவர்கள் ‘இப்றாஹீமே! இந்தப் பேச்சை விட்டு விடுங்கள்! அவர்களுக்கு அழிவு என்பது முடிவு செய்யப்பட்டது!’ என்று கூறுகின்றனர்.



இது குறித்துக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றது;



இப்றாஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி, நன்மாராயம் அவரிடம் வந்த போது, லூத்துடைய சமூகத்தார் பற்றி எம்முடன் அவர் தர்க்கிக்கலானார். நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத்தன்மையுடையவரும், இளகிய மனமுடையவரும், (இரட்சகன் பால்) மீள்பவருமாவார். இப்றாஹீமே! (இதை நீர்) விட்டு விடுவீராக! நிச்சயமாக உமது இரட்சகனின் கட்டளை வந்து விட்டது. தடுக்கப்பட முடியாத வேதனை நிச்சயமாக அவர்களுக்கு வந்தே தீரும். (11:74-76)



மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள். அவன் என்ன சொன்னாலும் அதைச் செய்வார்கள். லூத்(அலை) அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்ததாக அவர்கள் சொன்னால் அது பற்றி அவர்களிடம் தர்க்கிப்பது அர்த்தமற்ற வேலையாகும். யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்படி இருக்க லூத் நபியின் சமுகம் குறித்து இப்றாஹீம் நபி மலக்குகளுடன் தர்க்கம் செய்தார்கள் என்று இந்தச் சம்பவம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூறப்போகின்றனரா? மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இப்றாஹீம் நபி அறியாதிருந்தார்கள் என இந்தச் சம்பவம் கூறுவதாகக் கூறப்போகின்றனரா?



மற்றுமொரு இடத்தில் இது பற்றி குர்ஆன் கூறும் போது;



(வானவர்களான) எமது தூதர்கள் நற்செய்தியுடன் இப்றாஹீமிடம் வந்த போது, ”இக்கிராமத்தினரை நிச்சயமாக நாம் அழிக்கப் போகிறோம். ஏனெனில் அதிலுள்ளோர் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர். அ(தற்க)வர், ”நிச்சயமாக அதில் லூத் இருக்கிறாரே! என்று கூறினார். அ(தற்க)வர்கள், அதில் இருப்போர் பற்றி நாம் நன்கறிவோம். நிச்சயமாக அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்போம். அவள் தங்கி (அழிந்து) விடுவோரில் ஆகி விட்டாள்’ என்று கூறினர். (29:31-32)



எனக் குறிப்பிடுகின்றது.



அல்லாஹ்வின் கட்டளைப்படி அநியாயக்கார ஊரை அழிக்க வந்த மலக்குகளுக்கு அங்கே லூத் என்ற நபி இருப்பது தெரியாது என்று இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த வசனம் கூறுகின்றது. இவர் அங்கே லூத் நபி இருக்கின்றார் என்று சொல்லிக் கொடுத்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இதை பீஜேயின் பாணியில் அணுகினால் மலக்குகளை விபரமற்றவர்களாக இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த இந்தச் சம்பவம் கூறுகின்றது. அத்துடன் ஒரு பணிக்காக அல்லாஹ் மலக்குகளை அனுப்பும் போது அது குறித்த முழு விளக்கத்தையும் மலக்குகளிடம் சரியாகச் சொல்லாமல் அனுப்பியுள்ளானோ தெரியாது. இவர்கள் அழிக்கும் ஊரில் ஒரு நபி இருப்பது தெரியாமல் அவரையும் அழித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இப்றாஹீம் நபி பேசியதாக இந்த வசனம் கூறுகின்றது. எனவே ஆயிரம் நபித்தோழர்கள் ஏகோபித்து ஏற்றிருந்தாலும் ஒரு நபியின் அடிப்படை மார்க்க அறிவில் சந்தேகத்தை உண்டுபண்ணும் இந்த வசனங்களை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.



எனவே மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்திருப்பார் என்ற அடிப்படை அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் இதை மறுக்க வேண்டும் என வாதிடுவது அபத்தமானது. அப்படி வாதிட்டால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறுக்க நேரிடும்.



எனவே மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதைப் பீஜே மறுக்கும் விதம் ஆபத்தானது. இந்த வாதங்களை ஏற்றால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும். ஹதீஸ்களை மறுப்பதற்கு முன்வைக்கப்படும் அதே வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்க முடியும் என அவரே திர்மிதி முன்னுரையில் இந்த ஆபத்துக் குறித்து எச்சரித்துள்ளார். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்குச் சென்று விடாமல் குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிதானமாக, நடுநிலையாக அணுகி விளங்க வேண்டும். இரண்டையும் மோத விட்டு, இரண்டையும் மறுத்து விடாமல் இரண்டையும் இணைத்து விளங்கிச் செயல்பட அனைவரும் முன்வர வேண்டும்.



- மறுக்கப்படும் ஹதீஸ்கள் தொடர்பான விளக்கம் இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ் -





பிரிவு: பீஜே/ததஜ,மறுக்கப்படும் ஹதீஸ்கள்,மறுப்பு
4 responses so far





தொடர்புடைய பிற இடுகைகள்:

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)



4 Responses to “மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)”

ibnushaikh

on 13 Mar 2010 at 7:33 am

1ஆன்லைனில் அமைதியடைந்துவிட்டு ஏகத்துவத்தில் ஏகவசனமின்றி தமாஷ் செய்வதாக எழுதியுள்ளார் அதேபோல் பதில் என்ற பெயரில் பாதி கட்டுரை-யையும் வெளியிட்டுள்ளார். இஸ்மாயில் ஸலபி அவர்கள் சிறிது கவனம் செலுத்தவும்

அன்புடன் இப்னு ஷைக்



ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா

எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)


ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா?



சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.



இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்;



ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்த்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.



இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.



பத்து தடவை பாலருந்தினால் தான் “தாய்-பிள்ளை” எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.



இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்;

அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.



நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.



நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.



ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.



இந்த நிலையில் “முஸ்லிம் நூலில் இடம்பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே!” என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன” என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும்.



எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.



“முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்” என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.



ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?



“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம்” என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?



இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும். (பீஜே தமிழாக்கம், 4 ஆம் பதிப்பு, பக்கம் 1304-1305)



ஒரு பாமர மனிதன் எப்படி ஹதீஸை அணுகுவானோ, எப்படியெல்லாம் கேள்வி கேட்பானோ அதே விதத்தில் தான் சகோதரர் பீஜே அவர்களும் இந்தச் செய்தியை அணுகியுள்ளார்; கேள்விகளை அடுக்கியுள்ளார்.



இலங்கையில் ரிழ்வான் மாஸ்டர் என்பவர் தவ்ஹீத் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். பின்னர் அவர் கொள்கை மாறி அஹ்லுல் குர்ஆனாக மாறினார். இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆழமாக அறியாத அவர் திருமணம் முடித்து விபசாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஹதீஸ் கூறுகின்றது. அப்படி ஒரு வசனம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸை ஏற்றால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; அதன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டுள்ளன என்று கூற நேரிடும் என இந்த வாதத்தை முன்வைத்து ஹதீஸ்களை மறுத்தார்.



இவ்வாறே, “விடுதலை” (வெள்ளி 05-02-2010) ஏட்டில் மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்! என்ற தலைப்பில் அறிவுக்கரசு(?) என்ற பெயரில் ஒரு நாஸ்தீகன் எழுதிய கட்டுரையிலும் இதே தொணியில் கேள்வி கேட்கப்படுகின்றது.



குர்ஆனிய கலைகள் பற்றிய அறிவு அற்ற நாஸ்தீகர்களும், நாஸிஹ்-மன்ஸூஹ் (மாற்றியது-மாற்றப்பட்டது) பற்றிய அடிப்படை அறிவு அற்ற ரிழ்வான் மாஸ்டரும் வாதித்தது போன்றே அறிஞர் பீஜே அவர்கள் வாதிப்பது வியப்பாக உள்ளது.



இவர் தவறாக அர்த்தம் செய்து தப்பாக வாதிக்கும் இந்தச் செய்தி குறித்த விளக்கங்களை நோக்குவோம்.



நபித்தோழர் கூற்றை மறுத்தல்:

பீஜே குறிப்பிடும் இந்தச் செய்தி ஹதீஸ் அல்ல. இது ஒரு “அதர்” அதாவது ஒரு நபித்தோழரின் கூற்றாகும். இதை ஏற்பது குறித்தோ, எதிர்ப்பது குறித்தோ நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் இந்தச் செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் அணுகும் விதம் ஆபத்தானதாகும்.



எனவேதான் இது குறித்து விபரிக்க வேண்டியுள்ளது.



நியாயமற்ற அணுகுமுறை:

ஒரு செய்தியை விமர்சிப்பதென்றால் அந்தச் செய்தியில் கூறப்பட்ட கூற்றை வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும். இதுதான் நியாயமான பார்வையாகும். ஹதீஸில் இல்லாத அர்த்தத்தைத் தானாகத் திரித்து உண்டாக்கி விட்டு, தான் உண்டாக்கிய தப்பான விளக்கத்தின் அடிப்படையில் விமர்சித்துச் செல்வது நியாயமான வழிமுறை அல்ல.



சகோதரர் பீஜே அவர்கள் தஃலீம் தொகுப்பு குறித்து விமர்சிக்கும் வேளை, ஸகரிய்யா ஸாஹிப் பற்றிக் குறிப்பிடும் போது “இவர் முதலில் குர்ஆன் வசனத்தைத் தருவார். அதன் பின் ஹதீஸைத் தருவார். அதன் பின் தனது சொந்தச் சரக்குகளையும், நச்சுக்கருத்துக்களையும் விதைப்பார்” என்ற தொணியில் எழுதியுள்ளார்.



இங்கும் பீஜே அவர்கள் அதே பாணியில் ஹதீஸைப் போட்டு விட்டுப் பின்னர் சரியான அர்த்தத்தை எழுதி விட்டு பின்னர் தனது நச்சுக்கருத்தை விளக்கி, அந்த நச்சுக்கருத்தின் அடிப்படையில்தான் ஹதீஸ்களை மறுக்கின்றார்.



மேற்குறிப்பிட்ட செய்தியில் “இது மக்காவில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என்ற வாசகந்தான் சர்ச்சைக்குரிய(?) வாசகமாகும்.



இதனைத் தர்ஜமாவில் பீஜே முதலில் மொழியாக்கஞ் செய்யும் போது “இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என மொழி பெயர்த்துள்ளார்.



இதே செய்தியை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம் தொடர் மூன்றில் இன்னும் தெளிவாக பின்வருமாறு மொழியாக்கஞ் செய்துள்ளார்.



இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.



இதுதான் அந்தச் செய்தியின் அர்த்தம். இதைச் சரியாகச் செய்த பீஜே இதில் இல்லாத ஒரு விஷக் கருத்தை விளக்கப் பகுதியில் கொண்டு வருகின்றார்.



அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.



ஏற்கனவே நாம் ஹதீஸின் மொழிபெயர்ப்பைப் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் அந்த வசனம் இருந்தது என அந்தச் செய்தி கூறவில்லை. அந்த வசனங்களைச் சிலர் ஓதும் நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்றுதான் அந்தச் செய்தி கூறுகின்றது.



குர்ஆனில் இருந்தது எனும் போது இரண்டு அட்டைகளுக்குள் அச்சிடப்பட்ட குர்ஆன் தான் மக்களின் மனக் கண் முன் வரும். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது முழுக் குர்ஆனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரே ஏட்டில் ஒன்றாகத் திரட்டப்பட்டிருக்கவில்லை. குர்ஆனில் இருந்தது என்றதும் மக்கள் மனதில் திரட்டப்பட்ட குர்ஆன்தான் மனதில் வரும். திரட்டப்பட்ட குர்ஆனில் குறிப்பிட்ட ஒரு வசனம் இருந்ததாக ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். ஆனால் அப்படி ஒரு வசனம் இல்லையே? எனவே ஆயிஷா (ரலி) கூறிய செய்தி பொய்யானது என நியாயமில்லாமல் நிருவப் பார்க்கின்றார். ஆனால் அந்தச் செய்தி அப்படி ஒரு வசனத்தைச் சிலர் குர்ஆனாக ஓதி வரும் நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று கூறுகின்றது. குர்ஆனில் அப்படியொரு வசனம் இருந்தது என்று கூறவில்லை. (இருந்ததென்று கூறினாலே இந்தக் கூற்றைக் கூறும் போது “இல்லை!” என்பதுதானே அர்த்தம்?).



இப்படிக் கூறும் போது கூட “அப்படியானால் அந்த வசனம் எங்கே?” என்ற கேள்வி பாமர மக்களுக்கு எழுவது இயல்பே! இது குறித்த தெளிவைப் பெற நாஸிஹ்-மன்ஸூஹ் பற்றிய அறிவு அவசியமாகும்.



நாஸிஹ் மன்ஸூஹ்:

“நாஸிஹ்” என்றால் மாற்றியது. “மன்ஸூஹ்” என்றால் மாற்றப்பட்டது என்பது அர்த்தமாகும்.



அல்லாஹ் இறக்கிய ஒரு வசனத்தை அல்லது சட்டத்தை அவனே மாற்றுவது தான் நாஸிஹாகும். மனிதர்கள் யாரும் இதைச் செய்ய முடியாது. திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் உண்டு என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக விளக்குகின்றது.



“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?” (2:106)



“ஒரு வசனத்தின் இடத்தில் வேறு ஒரு வசனத்தை நாம் மாற்றினால், “நீர் இட்டுக் கட்டுபவரே!” எனக் கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டும் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.” (16:101)



திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் வசனங்கள் 3 விதங்களில் இருக்கும்.



1. வசனம் இருக்கும்., சட்டம் அமுலில் இருக்காது.,

இந்த வகை வசனங்கள் தான் நாஸிஹ்-மன்ஸூஹில் அதிகமாக உள்ளவையாகும்.



உதாரணமாக, “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்..” (4:43) என்ற வசனத்தின் மது குறித்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. பின்னர் இறங்கிய வசனத்தில் பொதுவாக மது தடுக்கப்பட்டது. தொழும் நேரம்-தொழாத நேரம் என்ற பாகுபாடு இன்றி அதை விட்டும் முற்று-முழுதாக விலகிக்கொள்ள வேண்டும் என்ற ஏவல் வந்தது. ஆயினும் அந்த வசனம் குர்ஆனில் இருந்து கொண்டே இருக்கின்றது.



2. வசனம் நீக்கப்பட்டுச் சட்டம் அமுலில் இருக்கும்.,

வசனம் – அதாவது, வார்த்தை இருக்காது. அதன் சட்டம் இருக்கும்.



உதாரணமாக, திருமணம் முடித்தவர்கள் விபசாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்தது. அந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. ஆயினும் சட்டம் நீக்கப்படவில்லை. இதே போன்று தான் 5 முறை பால் குடித்தால் தாய்-மகன் என்ற உறவு ஏற்படும் என்ற இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் சட்டம் நீக்கப்படவில்லை.



3. சட்டமும், வசனமும் நீக்கப்படுவது.,

சட்டமும் மாற்றப்பட்டு, வசனமும் நீக்கப்படுவது என்பது மற்றொரு வகையாகும்.



இதற்கு குறிப்பிட்ட 10 முறை பால் அருந்தினால் தான் உறவு முறை உண்டாகும் என்ற வசனம் உதாரணமாகும். இந்த வசனமும் நீக்கப்பட்டு விட்டது. இதன் சட்டமும் 5 முறை பாலூட்டினாலும் உறவு முறை உண்டாகும் என்று மாற்றப்பட்டு விட்டது.



எனவே 10 முறை, 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு உண்டாகும் என்ற வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டிருக்க, மனிதர்கள் நீக்கினார்கள் என்ற கருத்தைத் தரும் விதத்தில் விளக்கமளிக்க முற்படுவது அறிவீனமாகும்.



நபியவர்கள் மரணிக்கும் வரை நீக்கப்பட்ட வசனத்தை மக்கள் ஓதினார்களா?

ஒரு சட்டம் அல்லது வசனம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அனைவருக்கும் தெரிந்து விடக் கூடிய ஊடக வசதிகள் அன்று இருக்கவில்லை. உதாரணமாக, சகோதரர் பீஜே அவர்கள் சூனியம் குறித்து ஆரம்பத்தில் வைத்த கருத்துக்களும், பின்னர் வைத்த கருத்துக்களும் முரண்பட்டவையாகும். அவர் பின்னர் வைத்த கருத்தை விமர்சனம் செய்த போது, அவரது முன்னைய கருத்தை மட்டும் அறிந்த சகோதரர்கள் “நீங்கள் சொல்லக் கூடிய அதே கருத்தைத் தானே அவரும் கூறியுள்ளார்?” என்று கேட்கின்றனர். இந்த நிலை ஊடக வசதிகள் பெருகிய இன்றைய காலத்திலேயே இருக்கும் போது ஒரு வசனம் அல்லது சட்டம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அன்றிருந்த சகல முஸ்லிம்களுக்கும் தெரிந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை.



இதற்கு மற்றுமொரு உதாரணத்தைக் கூறலாம். உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டும் என்பது ஆரம்பச் சட்டமாகும். பின்னர் ஆண்-பெண் உறுப்புகள் சந்தித்து விட்டால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிக்க வேண்டும் என்று சட்டம் மாற்றப்பட்டது. இந்தச் செய்தியை அறியாத பலரும் முன்னைய சட்டத்தின் படி செயற்பட்டுள்ளனர். உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி வரை இது அனைவரும் அறியாத சட்டமாக இருந்துள்ளது.



இதே போன்று 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனம் இருந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்களது மரணம் நெருங்கிய சந்தர்ப்பத்தில் அந்த வசனம் நீக்கப்பட்டது. சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களது இறுதி றமழானில் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இரண்டு முறை குர்ஆனை ஒப்புவித்த காலப் பகுதியில் இது நடந்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்தை நாம் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்களது அந்திப காலத்தில் இது நடந்திருக்கின்றது என நம்பலாம்.



இந்த வசனம் மாற்றப்பட்ட பின்னரும் மாற்றப்பட்ட செய்தியை அறியாது மக்களில் சிலர் இதை ஓதி வந்துள்ளனர். இதைப் பீஜே அவர்களின் மொழியாக்கம் உறுதி செய்கின்றது.



இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலட்சணம் தொடர் 03)



ஏற்கனவே அல்லாஹ்வால் நீக்கப்பட்ட வசனத்தை அது நீக்கப்பட்டது என்பதை அறியாத சில மக்கள் ஓதி வந்துள்ளனர் என்ற தகவலைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.



குர்ஆனில் இப்படி ஒரு வசனம் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறுவதென்றால் ஒரு வசனத்தை மக்களில் சிலர் ஓதி வந்தார்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன?



குர்ஆனில் இந்த வசனம் நபியவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இந்தச் செய்தி கூறுகின்றது என்ற அடிப்படையில் தான் பீஜே அடுத்த வாதங்களைச் செய்கின்றார். அவரது அர்த்தமே பிழை என்னும் போது அடுத்த கட்ட வாதங்கள் அனைத்தும் அடியற்ற மரம் போல் சாய்ந்து விடுகின்றன.



நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என ஆயிஷா (ரலி) கூறாததால் இந்தக் கூற்றை ஏற்றால் குர்ஆனின் நம்பகத் தன்மைக்குப் பங்கம் ஏற்படப் போவதில்லை. அந்தச் செய்தியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அந்தச் செய்தியையும் நம்பலாம் ஒன்றை ஏற்று மற்றதை நிராகரிக்கும் நிலை ஏற்படாது.



ஆணவமா? அறிவு மமதையா?

ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் அறிவிப்பாளர் வரிசையை மட்டுந்தான் ஆய்வு செய்தார்கள். கருத்தை ஆய்வு செய்யவில்லை எனக் கூறிக் கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்களையெல்லாம் முட்டாள்களாகவும், அறிவிலிகளாகவும், குர்ஆன் பற்றிய அறிவு அற்றவர்களாகவும் சித்தரிக்க முற்படுகின்றார். அத்துடன் நான்தான் அனைத்தையும் எல்லாக் கோணங்களிலும் அணுவணுவாக ஆய்வு செய்பவன் என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முற்படுகிறார் போல் தென்படுகிறது.



சகோதரர்களே!

சகோதரர் பீஜே கூறுவது போல் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய கூற்று நபி (ஸல்) அவர்களது மரணம் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது; ஆனால் அது தற்போது குர்ஆனில் இல்லை என்ற கருத்தைத் தான் தருகின்றது என்றால், இந்தச் செய்தியைச் “சரி!” என்று கூறியவர்களும், இதைப் பதிவு செய்த இமாம் முஸ்லிமும், இதற்கு விளக்கமளித்த அறிஞர்களும் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாதவர்களா? ஹதீஸ் பற்றிப் பேசும் செய்தி என்றால் கூட ஹதீஸ்கள் முழுமையாகத் திரட்டப்படாததால் அனைத்து ஹதீஸ்களையும் தெரிந்த ஒரு மனிதரையும் தேடிப் பிடிக்க முடியாது. எனவே தவறு நடந்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இது குர்ஆன் பற்றிப் பேசுகின்றது. அன்றிருந்த அதிகமான அறிஞர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகக் கூறுகின்றார்களே! அப்படி ஒரு வசனம் இல்லையே! என்று சிந்தித்திருக்க மாட்டார்களா? கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அவைரும் முட்டாள்கள்; இவர் ஒருவர் தான் அறிஞரா?



இப்படி நாம் கேட்பது தக்லீதின் அடிப்படையில் அல்ல. இவர் கூறுவதைத் தான் அந்தச் செய்தி கூறுகின்றது என்றால் என்ன விளைவு ஏற்பட்டிருக்க வேண்டுமோ அந்த விளைவு ஏற்படவில்லை.



எனவே, கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அந்தச் செய்தியைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள். எனவே, பிழை செய்தியில் இல்லை. மாறாக, தவறாகப் புரிந்து கொண்ட சகோதரர் பீஜே அவர்களின் விளக்கத்தில் தான் உள்ளது.



ஆனால், எப்போதும் அடுத்தவர்களில் தவறைத் தேடுபவர்களுக்குத் தமது தவறு தெளிவாகத் தெரியாது.



இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அல்குர்ஆனில் இந்த ஒரு வசனம் இப்போது இல்லை என்ற கருத்தை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் செய்தியை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருந்தால், நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த அறிஞர்கள் அதைச் சரி கண்டிருக்கவும் மாட்டார்கள். எனவே நான் விளங்கிக் கொண்டதில் தான் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் எனச் சிந்தித்திருந்தால் இப்படியெல்லாம் வாதித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.



முடிவாக:

ஆயிஷா (ரலி) அவர்களது கூற்று, குர்ஆனில் நபியவர்களது மரணம் வரை இருந்த வசனம் பின்னர் நீக்கப்பட்டது என்ற கருத்தைத் தரவில்லை; 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனத்தை மக்கள் ஓதிக்கொண்டிருக்கும் நிலையில் தான் நபியவர்கள் மரணித்தார்கள் என்று தான் கூறுகின்றார்கள்.



இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. அதுவும் நபி(ஸல்) அவர்களது இறுதிக்காலத்தில் நீக்கப்பட்டது. இதை அறியாத மக்கள் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் காலப்பகுதியில்கூட அது குர்ஆன் என நம்பி ஓதி வந்துள்ளனர்.



இதைத்தான் இந்தச் செய்தி கூறுகின்றது. நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அல்குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என அர்த்தம் கொடுப்பது தவறு. நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் இந்த வசனம் நீக்கப்பட்டது என்ற கருத்தை இது தருவதாகக் கூறுவதும் தவறு. குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்னுகிறது; குர்ஆனில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நீக்கலாம் சேர்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதெல்லாம் தேவையற்ற ஒப்பாரிகளாகும்.



குர்ஆனையும், ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களையும் ஒருசேர ஏற்று ஒன்றை ஏற்று மற்றையதை நிராகரிக்கும் வழிகேட்டிலிருந்து விலகியிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!





பிரிவு: பீஜே/ததஜ,மறுக்கப்படும் ஹதீஸ்கள்,மறுப்பு
17 responses so far





தொடர்புடைய பிற இடுகைகள்:

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)



17 Responses to “மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)”